மேலும் இரண்டு 660 சிசி மோட்டார் சைக்கிள்களின் உருவாக்க பணியில் ட்ரையம்ப்

6 November 2020, 8:40 pm
Triumph working on two more 660cc motorcycles
Quick Share

ட்ரையம்ப் நிறுவனம் புதிய 660 சிசி மோட்டார் சைக்கிளை உலக சந்தைகளில் அறிமுகம் செய்து சில நாட்களே ஆகின்றன. இப்போது கசிந்த தகவல்களின் படி, ட்ரையம்ப் நிறுவனம் இதே போன்று மேலும் இரண்டு மோட்டார் சைக்கிள்களின் உருவாக்க பணியில் வேலைச் செய்து செய்கிறது.

ஒரு டீலர்ஷிப் மாநாட்டின் போது, நிறுவனம் தனது எதிர்கால திட்டங்களை வெளிப்படுத்தியது. அதில் காண்பிக்கப்பட்ட படத்தின்படி, ட்ரையம்ப் 660 சிசி சாகச பைக்கையும் 660 சிசி சாகச விளையாட்டு மோட்டார் சைக்கிளையும் உருவாக்கி வருகிறது. இந்த பைக்குகளின் அடிப்படை ஸ்கெட்ச் அதன் இருப்பை மேலும் உறுதி படுத்தியது.

ட்ரையம்ப் இப்போது அதன் மிடில்வெயிட் வகையுடன் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. ஸ்ட்ரீட் டிரிபிள் RS 765 சிசி இன்ஜின் பிரிவில் இருக்கும்போது, நிறுவனம் 650 சிசி பிரிவிலும் ஒரு பெரிய சந்தையைக் கைப்பற்ற எதிர்பார்ப்பது போல் தெரிகிறது.

இந்த புதிய பைக்குகள் அடுத்த சில மாதங்களில் உலகிற்கு வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கலாம். உண்மையில், இந்த பைக்குகளைப் பெறும் முதல் சில நாடுகளில் இந்தியாவும் ஒன்றாக இருக்கும் என்று நாங்கள் நினைக்கிறோம்.

Views: - 34

0

0

1 thought on “மேலும் இரண்டு 660 சிசி மோட்டார் சைக்கிள்களின் உருவாக்க பணியில் ட்ரையம்ப்

Comments are closed.