இவங்க ஏன் போன் பண்றாங்க? போன் எடுக்காமலேயே காரணத்தைத் தெரிந்து கொள்ள புது வசதி!

23 October 2020, 11:46 am
TRUECALLER WILL NOW DISPLAY THE REASON FOR INCOMING CALLS
Quick Share

இப்போதெல்லாம் நிறைய பேர் ட்ரூகாலர் செயலியைத் தங்கள் போனில் பயன்படுத்துகின்றனர். அதற்கு முக்கியமான காரணம் நம் Contact list இல் இல்லாதவர்கள் நமக்கு போன் செய்தாலும் அவர்கள் நம்பர் வேறு யாருடைய போன்களிலாவது Save ஆகியிருந்தாலும் நமக்கு அவர்களின் பெயர் தெரிந்து விடும். அதனால், நாம் அந்த அழைப்பை எடுக்கலாமா வேண்டாமா என்று ஈசியாக முடிவு செய்து கொள்ளலாம்.  

இதனால் கிரெடிட் கார்டு, லோன் என திரும்ப திரும்ப தேவையில்லாமல் வரும் spam அழைப்புகளை நாம் எளிதில் தவிர்த்துவிடலாம். ஆனால், இன்னும் சில முக்கியமான நேரங்களில் நாம் முக்கியமான வேலைகளில் இருக்கும்போது நம் Contact list இல் இருப்பவர்களே ஏதேனும் அவசர செய்தியை சொல்ல போன் செய்யலாம். நாம் முக்கியமான வேலைக் காரணமாக அப்போது அந்த அழைப்பைத் தவிர்த்திருந்தாலும் பின்னர் அய்யய்யோ அந்த அழைப்பை எடுத்திருக்கலாமே என்று நினைப்போம். சில சமயங்களில் விஷயம் ஏதும் இல்லாமலும் சும்மா பேசுவதற்கு கூட சிலர் போன் செய்யலாம்.

இது போன்ற சமயங்களில் ஒருவர் ஏன் போன் செய்கிறார் என்று அழைப்பை எடுக்காமலே தெரிந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று தோன்றும். அப்படி ஒரு சூப்பரான அம்சம் தான் இப்போது ட்ரூகாலரில் வந்துள்ளது.  அதற்கு பெயர் தான் Call Reason. 

யாராவது போன் செய்தால் ஏன் அழைக்கிறார்கள் என்பதை பயனர்களுக்குத் தெரிவிக்கும் அம்சம் தான் இந்த Call Reason. இது போன்ற ஒரு அம்சத்தைப் பயனர்கள் தொடர்ந்துக் கேட்டு வந்ததால் இந்த Call Reason அம்சத்தைச் சேர்த்துள்ளதாக ட்ரூகாலர் தெரிவித்துள்ளது. இந்த அம்சம் இப்போது ஆன்ட்ராய்டு பயனர்களுக்கு கிடைக்கிறது. iOS பயனர்களுக்கு இந்த அம்சம் எப்போது கிடைக்கும் என்பது குறித்த எந்த தகவலும் இல்லை. 

TRUECALLER CALL REASON அம்சத்தைப் பயன்படுத்துவது எப்படி?

ட்ரூகாலர் 11.30 வெர்சனில் ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு மட்டும் இந்த புதிய அம்சம் வெளியிடப்படுகிறது. 

யாருக்கேனும் நீங்கள் போன் செய்ய வேண்டுமென்றால் Call Reason அம்சத்திலேயே மூன்று தனிப்பயன் ஆக்கப்பட்ட காரணங்கள் இருக்கும். உங்களுக்கான காரணம் அதிலிருப்பதாக இருந்தால் அதிலிருந்து ஒரு காரணத்தைத் தேர்வு செய்து கொள்ளலாம் அல்லது நீங்கள் அழைப்பதற்கான  காரணம் காண்பிக்கப்படவில்லை என்றால், நீங்களே உங்கள் அழைப்புக்கான காரணத்தை டைப் செய்தும் கொள்ளலாம். 80 வார்த்தைகளில் தங்கள் அழைப்புக்கான காரணத்தை போன் செய்பவர்கள் தெரிவிக்கலாம்.  இந்த அம்சம் பயனுள்ளதாக இருக்க வேண்டுமெனில் அழைப்பு விடுப்பவர் மற்றும் அழைப்பு பெறுபவர் இருவருமே ட்ரூகாலர் பயனராக இருக்க அவசியம். சரி , Truecaller Call Reason அம்சத்தைப் பற்றி தெரளிவாக பார்த்துவிட்டோம்.

நீங்கள் Truecaller பயனராக இருந்தால்  இந்த Call Reason பயனுள்ளதாக உள்ளதா இல்லையா என்பதை பயன்படுத்தி பார்த்துவிட்டு கமெண்டில் சொல்லுங்கள்.

Views: - 22

0

0