டிக்டாக்கின் உரிமை நிறுவனத்துடன் பரிவர்த்தனைகளை தடை செய்ய டிரம்ப் அதிரடி உத்தரவு

7 August 2020, 8:36 am
Trump issues order to ban transactions with TikTok's Chinese owner
Quick Share

ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், டிக்டாக் (Tiktok) அல்லது சீனாவை தலமாகக் கொண்ட பைட் டான்ஸ் லிமிடெட் நிறுவனத்துடன் தொடர்புடைய பயன்பாடுகளுடன் அமெரிக்க குடிமக்கள் எந்தவொரு வியாபாரத்தையும் செய்ய தடை விதித்து, 45 கெடுவுடன் நிறைவேற்றும் ஆணையில் கையெழுத்திட்டார்.

பிரபலமான வீடியோ செயலியான டிக்டாக் (Tiktok) செயலியை செப்டம்பர் 15 க்குள் அமெரிக்க நிறுவனத்துக்கு டிரம்ப் விற்க கோரியதையடுத்து, அமெரிக்காவிற்கான தேசிய பாதுகாப்பு அபாயங்களை மேற்கோள் காட்டி இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

மேலும், இந்த உத்தரவு நடைமுறைக்கு வந்தபின் டிக்டாக் அல்லது பைட் டான்ஸுடன் எந்தவொரு பரிவர்த்தனையிலும் ஈடுபடும் எந்தவொரு அமெரிக்க குடியிருப்பாளருக்கும் அல்லது நிறுவனத்திற்கும் அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

“இந்த மொபைல் பயன்பாடு சீன கம்யூனிஸ்ட் கட்சிக்கு பயனளிக்கும் வகையில் தவறான வழிகளில் பயன்படுத்தப்படலாம்” என்று டிரம்ப் வெள்ளை மாளிகையால் வியாழக்கிழமை வெளியிடப்பட்ட உத்தரவில் தெரிவித்துள்ளார்.

டிக்டாக் (Tiktok) மூலம் நடத்தப்படும் தரவு சேகரிப்பு “சீனர்களின் கம்யூனிஸ்ட் கட்சி அமெரிக்கர்களின் தனிப்பட்ட மற்றும் தனியுரிம தகவல்களை அணுக அனுமதிக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது. மேலும், இது பெடரல் ஊழியர்கள் மற்றும் ஒப்பந்தக்காரர்களின் இருப்பிடங்களைக் கண்காணிக்கவும், பிளாக் மெயிலுக்கு தனிப்பட்ட தகவல்களின் ஆவணங்களை உருவாக்கவும், பெருநிறுவன உளவு நடத்தவும் சீனாவை அனுமதிக்கும்.” என்று உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுவும் படிக்கலாமே: 3000 ஆண்டுகள் பழமை வாய்ந்த கடவுள் முகத்துடன் கூடிய சிலை கண்டுபிடிப்பு!!!(Opens in a new browser tab)

Views: - 6

0

0

1 thought on “டிக்டாக்கின் உரிமை நிறுவனத்துடன் பரிவர்த்தனைகளை தடை செய்ய டிரம்ப் அதிரடி உத்தரவு

Comments are closed.