டி.வி.எஸ் அப்பாச்சி பைக்கின் விலை உயர்ந்தது!

13 January 2021, 1:06 pm
TVS Apache range gets expensive!
Quick Share

டி.வி.எஸ் மோட்டார் நிறுவனம் தனது முதன்மை பிராண்டான அப்பாச்சியின் விலைகளை அதிகரிக்க முடிவு செய்துள்ளது. இந்த புதிய விலைகள் ஜனவரி 2021 முதல் தயாரிக்கப்படும் மோட்டார் சைக்கிள்களுக்குப் பொருந்தும்.

அப்பாச்சி RR310 பைக் அதிக விலை உயர்வு பெற்றுள்ளது. இந்த பைக் இப்போது ரூ.3000 விலை உயர்ந்துள்ளது, இப்போது இதன் எக்ஸ்ஷோரூம் விலை ரூ.2.48 லட்சம் ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அப்பாச்சி RTR 200 4V ரூ.2000 விலை உயர்வுப் பெற்றுள்ளது. இந்த டிவிஎஸ் பைக் இப்போது மும்பையில் ரூ.1.33 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் விற்கப்படுகிறது.

அப்பாச்சி RTR 160 4V விலை ரூ.1770 உயர்ந்துள்ளது. பழைய மாடல்களான அப்பாச்சி RTR 180 மற்றும் RTR 160 பைக்குகளின் விலை முறையே ரூ.1770 மற்றும் ரூ.1520 உயர்ந்துள்ளன.

Views: - 11

0

0