டிவிஎஸ் அப்பாச்சி RTR160 மற்றும் RTR180 பைக்குகளின் விலைகள் உயர்ந்தது | இப்போ புதிய விலைகள் எவ்ளோ தெரியுமா?

Author: Dhivagar
6 August 2021, 3:50 pm
TVS Apache RTR 160 and RTR 180 get price hike
Quick Share

டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் தனது அப்பாச்சி தொடரின் விலைகளை இந்திய சந்தையில் உயர்த்தியுள்ளது. இந்த விலை திருத்த முடிவால் நிறுவனத்தின் அப்பாச்சி RTR160 (2V) மற்றும் அப்பாச்சி RTR180 மோட்டார் சைக்கிள்களின் விலைகள் உயர்ந்துள்ளன. 

இரண்டு வகைகளில் வரும் அப்பாச்சி RTR160 இன் இரண்டு வால்வு மாடலின் ஆரம்ப விலை முன்பு ரூ.1,02,070 ஆக இருந்தது இப்போது ரூ.1,06,365 ஆக உயர்ந்துள்ளது. 

உயர்த்தப்பட்ட விலை விவரங்கள் இதோ:

அப்பாச்சி RTR160 (2V) டிரம்: ரூ.1,06,365 (முன்பு ரூ. 1,02,070)

அப்பாச்சி RTR160 (2V) டிஸ்க்: ரூ .1,09,365 (முன்பு ரூ. 1,05,070)

அப்பாச்சி RTR180: ரூ 1,13,065 (முன்பு ரூ. 1,08,270)

குறிப்பு: அனைத்து விலைகளும் டெல்லி எக்ஸ்-ஷோரூம் விலைகள் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

டிவிஎஸ் நிறுவனம் அறிவித்துள்ள இந்த விலை திருத்தம் மோட்டார் சைக்கிள்களுக்கு எந்தவொரு ஒப்பனை அல்லது இயந்திர ரீதியான மேம்படுத்தல்களையும் கொண்டு வரவில்லை. இதனால், அப்பாச்சி RTR160 (2V) மாடல் தொடர்ந்து அதே 159.7 சிசி, ஒற்றை சிலிண்டர் இன்ஜின் உடனே 8,400 rpm இல் 15.31 bhp ஆற்றலையும், 7,000 rpm இல் 13.9 Nm உச்ச திருப்புவிசையை மட்டுமே உற்பத்தி செய்கிறது. 

மறுபுறம், அப்பாச்சி RTR180, 177.4 சிசி, ஒற்றை சிலிண்டர் இன்ஜின் உடன் 8,500 rpm இல் 16.56 bhp மற்றும் 7,000 rpm இல் 15.5 Nm உச்ச திருப்புவிசையை உற்பத்தி செய்கிறது.

இரண்டு மோட்டார் சைக்கிள்களும் LED DRL, சிங்கிள்-பாட் ஹெட்லைட், ஸ்போர்ட்டி டிசைன், டெலஸ்கோபிக் ஃப்ரண்ட் ஃபோர்க்ஸ், இரட்டை பக்க ரியர் ஷாக்ஸ், இதழ் வகை டிஸ்க் பிரேக்குகள் மற்றும் சிங்கிள்-சேனல் ABS போன்ற பாதுகாப்பபு அம்சங்கள் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.

Views: - 257

0

0