TVS iQube எலக்ட்ரிக் ஸ்கூட்டர் புனேவில் அறிமுகம் | அங்கு விலை எவ்ளோ தெரியுமா?

Author: Dhivagar
30 June 2021, 7:48 pm
TVS iQube electric scooter launched in Pune
Quick Share

டி.வி.எஸ் மோட்டார் நிறுவனம் தனது ஐக்யூப் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை புனேவில் அறிமுகப்படுத்தியுள்ளது. திருத்தப்பட்ட FAME II திட்டம் மற்றும் மகாராஷ்டிரா மாநில மானியத்தின் கீழ் விலைக் குறைப்புக்குப் பின்னர் இது ரூ.1,10,898 ஆன்-ரோட் விலையில் விற்கப்படும். இப்போது வரை, ஐக்யூப் டெல்லி மற்றும் பெங்களூரில் மட்டுமே கிடைத்தது. இருப்பினும், டி.வி.எஸ் மே 2021 இல் இந்தியா முழுவதும் மேலும் 20 நகரங்களில் இ-ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தும் பணியில் ஈடுபட்டதாக அறிவித்தது. அதையடுத்து இப்போது புனேவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

பெட்ரோல் மூலம் இயங்கும் 125 சிசி ஸ்கூட்டர்களுடன் ஒப்பிடும்போது, IQube மிகவும் சிறப்பான மின்சார ஸ்கூட்டர் ஆகும். அதிலும் குறிப்பாக செயல்திறன் அடிப்படையில் இது மிகவும சிறப்பானதாக பார்க்கப்படுகிறது. 4.4 கிலோவாட் மின்சார மோட்டாரால் இயக்கப்படுகிறது, இது 140Nm முறுக்குவிசையை உருவாக்கும், இது 78kmph வேகத்தில் செல்லும் திறன் கொண்டது. இதன் மோட்டார் 2.25 கிலோவாட் பேட்டரி பேக்கிலிருந்து ஆற்றல் பெற்று முழு சார்ஜிங் உடன் 75 கி.மீ. வரை பயண வரம்பை வழங்குகிறது. இந்த பேட்டரியை வீட்டிலேயே 5A சாக்கெட் செருகுவதன் மூலம் சார்ஜ் செய்ய முடியும்.

பல தீவிரமான தோற்றமுடைய மின்சார ஸ்கூட்டர்களைப் போலல்லாமல், நேர்த்தியான மற்றும் வளைந்த உடல் பேனல்கள் உடன் மிக அழகாக கண்களை ஈர்க்கும் எளிமையான தோற்றத்தில் iQube ஸ்கூட்டர் வருகிறது. இது ஒரே ஒரு வெள்ளை வண்ண விருப்பத்தில் கிடைக்கும். அதன் வழக்கமான வடிவமைப்பிற்கு மாறாக, மிகவும் நவீனமான அம்சங்களை கொண்டுள்ளது. புளூடூத் வழியாக ஸ்மார்ட்போனுடன் இணைக்கக்கூடிய பெரிய TFT திரை உள்ளது. TVS iQube ஆப் மூலம், ஸ்கூட்டரைப் பற்றிய பல தகவல்களை அணுகலாம். இது முழு LED விளக்குகள், Q-பார்க் அசிஸ்ட், இரண்டு சவாரி முறைகள் மற்றும் மீளுருவாக்கம் பிரேக்கிங் போன்ற அமைப்புகளைக் கொண்டுள்ளது.

அதிக விலை தான மின்சார வாகனங்களை வாங்க முக்கிய பிரச்சினைகளில் முதன்மையாக இருக்கிறது. ஆனால் மானியத்தை அதிகரிப்பதன் மூலம் அரசாங்கம் மின்சார வாகனங்கள் வாங்குவதை ஊக்குவித்து, விற்பனை அதிகரிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Views: - 325

0

0