சான்ஸே இல்ல… வேற லெவல்! ஹார்லி டேவிட்சன் ஆக மாறிய டி.வி.எஸ் XL!

12 May 2021, 9:25 am
TVS XL Moped Modified To Look Like Harley Davidson
Quick Share

அளவில் சிறயதாக இருப்பதாலும், நன்கு எடை தாங்கும் திறன் இருப்பதாலும், முக்கியமாக மற்ற வணக்கங்களை விட விலை குறைவாக இருப்பதாலும், கிராமங்களில் இருக்கும் விவசாயிகள் தங்கள் விளைபொருட்களைக் கொண்டு செல்வதிலிருந்து  நகரங்களில் ஹோட்டல்கள், மளிகை, பலசரக்கு கடைகளின் பயன்பாட்டுக்கென இந்த  TVS XL 100 மொபெட்டின் பயன்பாடு எண்ணில் அடங்காதவை என்று  சொல்லலாம். இதனாலேயே பட்டி தொட்டியெங்கும் இந்த TVS XL 100 செம ஃபேமஸ். 

TVS XL Moped Modified To Look Like Harley Davidson

இந்த XL 100 ஒரு ஹார்லி டேவிட்சன் ஆக மாறினால் எப்படி இருக்கும்! அப்படியொரு முயற்சியை கையிலெடுத்து அதை வெற்றிகரமாக நிறைவேற்றி XL 100 ஐ ஹார்லி டேவிட்சன் பைக்காக மாற்றி அசத்தியுள்ளார் Sudus Customs என்ற பெயரில் யூடியூப் சேனல் வைத்திருக்கும் ஒரு யூடியூபர். உண்மையான ஹார்லி டேவிட்சன் போன்று இல்லையென்றாலும் அதன் வடிவமைப்பு நிச்சயமாக கிளாசிக்கல் அமெரிக்க பாபர் பைக்கை போலவே தோன்றுகிறது.

TVS XL Moped Modified To Look Like Harley Davidson

டிவிஎஸ் XL 100 ஐ மறுவடிவமைப்புச்  செய்த வடிவமைப்பாளர் ஒவ்வொரு பாகங்களிலும் கவனம் செலுத்தியுள்ளார். மறுவடிவமைப்புச் செய்யப்பட்ட பைக்கின் கிட்டத்தட்ட ஒவ்வொரு பகுதியும் கைகலாலேயே வடிவமைக்கப்பட்டுள்ளது. 

ஹார்லி டேவிட்சனின் கிளாசிக் க்ரூஸர் பைக்கைப் போலவே மஞ்சள் நிற ஃபியூயல் டேங்க் பார்ப்போரை கவரும் வகையில் உள்ளது. ஃபியூயல் டேங்கில் ஹார்லி டேவிட்சன் லோகோ Forty Eight என்ற பிராண்ட் பெயர்களும் அச்சிடப்பட்டுள்ளது. 

இது ஒரு போல்ட்-ஆன் டேங்க் ஆக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதை எளிதாக நிறுவலாம் அல்லது அகற்றலாம். 

ஹார்லி டேவிட்சன்  பைக் என்றாலே கவனம் ஈர்ப்பது V-ட்வின் இன்ஜின் தான். இவ்வளவு கவனம் செலுத்திய வடிவமைப்பாளர் அதை எப்படி விடுவார்.  இதில் சிறிய 100 சிசி இன்ஜின் V-ட்வின் வடிவத்தில் பொருத்தப்பட்டுள்ளது. இந்த தனிப்பயனாக்கப்பட்ட பைக்கில் தனிப்பயனாக்கப்பட்ட பக்க பெட்டிகளும் உள்ளன. 

அதே போல தனிப்பயனாக்கப்பட்ட மஃப்லர்களுடன் இரட்டை வெளியேற்ற அமைப்பையும் வடிவமைப்பாளர் இதில் சேர்த்துள்ளார், இருப்பினும் இதில் ஒன்று மட்டுமே செயல்படுகிறது. அதே போல முன் மட்கார்ட் மற்றும் பின்புற ஃபெண்டர் போன்ற பிற பகுதிகளும் கையாலேயே வடிவமைக்கப்பட்டுள்ளன. குரோம் பெசல்ஸ், வட்ட குறிகாட்டிகள் மற்றும் அனலாக் இன்ஸ்ட்ருமென்ட் கிளஸ்டர், ஒரு வட்ட ஹெட்லேம்ப் போன்ற அம்சங்களும் இதனில் உள்ளது.

TVS XL Moped Modified To Look Like Harley Davidson

மற்ற விவரக்குறிப்புகளைப் பொறுத்தவரை, புதிய டிவிஎஸ் XL 100 99.7 சிசி நான்கு-ஸ்ட்ரோக் இன்ஜின் உடன் இயக்கப்படுகிறது, இது 4.3 bhp மற்றும் 6.5 Nm உச்ச திருப்புவிசையை உற்பத்தி செய்கிறது. ஆனால், ஹார்லி டேவிட்சன் 48 ஒரு பெரிய 1202 சிசி இணை-இரட்டை இன்ஜின் உடன் இயக்கப்படுகிறது, இது 96 Nm திருப்புவிசையை வெளியேற்றும் திறன் கொண்டது.

TVS XL Moped Modified To Look Like Harley Davidson

Views: - 327

0

0