மத்திய பட்ஜெட் ஆவணங்களை உங்கள் கைகளில் பெற ஓர் புதிய வசதி! எப்படினு தெரிஞ்சிக்கோங்க

29 January 2021, 6:23 pm
Union Budget Mobile App Download Links, Language Options And More
Quick Share

இந்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டங்களை திட்டமிடுவதற்கான நேரம் வந்துவிட்டதால், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ‘யூனியன் பட்ஜெட் மொபைல் ஆப்’ ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளார். 2021-22 ஆம் ஆண்டிற்கான யூனியன் பட்ஜெட் பிப்ரவரி 1 ஆம் தேதி தாக்கல் செய்யப்படும், மேலும் இந்த மொபைல் பயன்பாடும் அதற்கேற்றவாறு சரியான நேரத்தில் தொடங்கப்பட்டுள்ளது. இந்த பயன்பாடு பொதுமக்கள் பட்ஜெட் ஆவணங்களை அணுக விரும்பும் போதெல்லாம் அதை உடனுக்குடன் கைகளில் பெற முடியும் என்பதை உறுதி செய்கிறது.

யூனியன் பட்ஜெட் பயன்பாட்டை DEA (பொருளாதார விவகாரங்கள் துறை – Department of Economic Affairs) வழிகாட்டுதலின் கீழ் NIC (தேசிய தகவல் மையம் – National Informatics Centre) உருவாக்கியுள்ளது. மத்திய பட்ஜெட் 2021 ஐ நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் தாக்கல் செய்து முடித்தவுடன், அனைத்து பட்ஜெட் ஆவணங்களும் இந்த பயன்பாட்டில் கிடைக்கும்.

யூனியன் பட்ஜெட் ஆப் பதிவிறக்கம்

பட்ஜெட் ஆவணங்களை பார்க்க நீங்கள் ஆர்வமாக இருந்தால், உங்கள் ஸ்மார்ட்போனில் யூனியன் பட்ஜெட் பயன்பாட்டைப் பதிவிறக்கலாம். இது Android மற்றும் iOS இயங்குதளங்களுடன் இணக்கமானது மற்றும் நீங்கள் Google Play Store அல்லது Apple App Store இலிருந்து பயன்பாட்டைப் பதிவிறக்கலாம். யூனியன் பட்ஜெட் வெப் போர்ட்டலில் இருந்து பயன்பாட்டைப் பதிவிறக்கவும் முடியும்.

யூனியன் பட்ஜெட் பயன்பாடு பயனர்கள் அனைத்து 14 யூனியன் பட்ஜெட் ஆவணங்களுக்கும் முழுமையான அணுகலைப் பெற அனுமதிக்கும். அரசியலமைப்பால் பரிந்துரைக்கப்பட்ட மானியங்களுக்கான தேவை (Demand for Grants), பட்ஜெட், நிதி மசோதா என அழைக்கப்படும் வருடாந்திர நிதிநிலை அறிக்கை ஆகியவை இதில் அடங்கும். 

இன்னும் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், பயன்பாட்டின் இடைமுகம் ஆங்கிலம் மற்றும் இந்தியை ஆதரிக்கிறது. மேலும், இது பயனருக்கு இணக்கமானது மற்றும் பயனர்கள் இந்த ஆவணங்களை பதிவிறக்கம் செய்வது மட்டுமல்லாமல் அச்சிடவும், பெரிதாக்கவும், சிறிதாக்கவும் மற்றும் விவரங்களைத் தேடவும் அனுமதிக்கிறது.

காகிதமில்லா ஓர் முயற்சி

சுதந்திரத்திற்குப் பிறகு முதல் தடவையாக மத்திய பட்ஜெட் காகிதமில்லாமல் டிஜிட்டல் தளத்தில் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது. கொரோனா தொற்று காரணமாக, இந்த முறை பட்ஜெட் ஆவணங்கள் அச்சிடப்படாது. குறிப்பிடத்தக்க வகையில், அச்சிடும் செயல்முறைக்கு ஒரு பதினைந்து நாட்கள் அச்சகத்தில் 100 பேர் பணிபுரிய வேண்டும் என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த காகிதமற்ற நடவடிக்கைக்கு நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் ஒப்புதல் அளித்துள்ளன.

Views: - 0

0

0