வோடபோன்-ஐடியாவின் Unlock 2.0 ஆஃபர்! அசத்தலான சலுகைகளுடன் புதிய திட்டம்

23 June 2021, 10:01 am
Vi Launches Rs.75 Prepaid Plan For Low-Income Group
Quick Share

தொலைத்தொடர்பு நிறுவனமான Vi (வோடபோன்-ஐடியா) அதன் குறைந்த வருமானம் கொண்ட பயனர்களுக்காக ஒரு புதிய திட்டத்தை அறிமுகப்படுத்துவதாக அறிவித்துள்ளது. பல பயனர்கள் தங்கள் கிராமங்களிலிருந்து அல்லது சொந்த ஊரிலிருந்து நகரங்களுக்குத் திரும்புவதால் குறைந்த விலையிலான ரூ.75 திட்டத்தை அறிமுகம் செய்வதாக Vi அறிவித்துள்ளது.

வோடபோன்-ஐடியா Unlock 2.0 ஆஃபர் 

புதிய ரூ.75 திட்டம் 50 நிமிடங்கள் அழைப்பு சேவை மற்றும் அதன் பயனர்களுக்கு 50MB டேட்டா ஆகியவற்றை வழங்குகிறது. இந்த பேக் 15 நாட்களுக்கு செல்லுபடியாகும் மற்றும் ப்ரீபெய்ட் பயனர்களுக்கு கிடைக்கிறது. கூடுதலாக, தற்போதைய நெருக்கடி காலத்தில் அதிக பணம் கொடுத்து ரீசார்ஜ் செய்ய முடியாதவர்களுக்கு இந்த வசதி பயனுள்ளதாக இருக்கிறது.

இந்த சலுகை அன்லாக் 2.0 நன்மை என அழைக்கப்படுகிறது, இது குறிப்பிட்ட Vi பயனர்களுக்கு மட்டுமே கிடைக்கும். இந்த திட்டத்திற்கு வாடிக்கையாளர்கள் தகுதியானவரா என்பதை சரிபார்க்க 44475# என்ற USSD code மற்றும் கட்டணமில்லா IVR 121153 எண்ணை டயல் செய்து அறிந்து கொள்ளலாம்.

அதன் பிறகு, பயனர்கள் நன்மைகளுக்கு தகுதியுடையவர்கள் இல்லையா என்பதை Vi தீர்மானிக்கும். பின்னர், நிறுவனம் உங்களுக்கு ஒரு செய்தியை அனுப்பும். அதில் ரூ.75 திட்டத்தின் விவரங்களை தெரியப்படுத்தும். 

இந்த பேக் தவிர, இந்தியாவின் மூன்றாவது பெரிய தொலைத் தொடர்பு ஆபரேட்டர் வோடபோன்-ஐடியா ரூ.49 விலையிலான மற்றொரு திட்டத்தையும் அறிமுகம் செய்துள்ளது; நிறுவனம் ரூ.49 திட்டம், பயனர்களுக்கு ரூ.38 டாக் டைம் மற்றும் 300MB டேட்டா ஆகியவற்றை 28 நாட்களுக்கு மட்டும் வழங்குகிறது. இலவச லோக்கல் மற்றும் தேசிய அழைப்புகளும் இதில் அடங்கும்.

ஒரு பயனர் ஆப் மற்றும் வலைத்தளம் வழியாக ரீசார்ஜ் செய்தால், அவர்களுக்கு கூடுதலாக 200MB டேட்டா கிடைக்கும் என்றும் நிறுவனம் அறிவித்துள்ளது.

Views: - 193

0

0