டிஸ்னி+ ஹாட்ஸ்டார் உடன் கிடைக்கும் புதிய “Vi” ப்ரீபெய்டு ரீசார்ஜ் திட்டங்கள் | விவரங்கள் இங்கே

Author: Dhivagar
3 September 2021, 3:19 pm
Vi upgrades Disney+ Hotstar Mobile prepaid offers
Quick Share

Vi (Vodafone Idea) நிறுவனம் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் மொபைல் திட்டத்திற்கான ஒரு வருட சந்தாவுடன் புதிய ரீசார்ஜ் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது, 

டிஸ்னி+ ஹாட்ஸ்டார் மொபைல் திட்டத்தினை தனியே பெறும்போது ரூ.499 செலவாகிறது. 

இப்போது வோடபோன்-ஐடியா நிறுவனங்கள் வழங்கும் ரூ.501 முதல் தொடங்கி ரூ.2,595 வரை விலைக்கொண்ட திட்டங்களுடனும் இந்த டிஸ்னி+ ஹார்ஸ்டாருக்கான அணுகல் கிடைக்கிறது. Vi மொத்தம் ஐந்து புதிய ப்ரீபெய்டு திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது. 

டிஸ்னி+ ஹாட்ஸ்டாரின் ஒரு வருட சந்தாவுடன் கூடுதலாக, இந்த Vi ப்ரீபெய்ட் திட்டங்கள் வரம்பற்ற குரல் அழைப்புகள், ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் மற்றும் ஒரு நாளைக்கு 3 ஜிபி டேட்டா மற்றும் 48 ஜிபி வரை கூடுதல் டேட்டா போன்ற சேவைகளையும் வழங்குகின்றன. 

திட்ட விலைகள்நன்மைகள்வேலிடிட்டி
₹5013GB/day + 16GB டேட்டா, வரம்பற்ற அழைப்பு வசதி, 100 SMS/day28 நாட்கள்
₹7013GB/day +32GB டேட்டா, வரம்பற்ற அழைப்பு வசதி, 100 SMS/day56 நாட்கள்
₹9013GB/day + 48GB டேட்டா, வரம்பற்ற அழைப்பு வசதி, 100 SMS/day84 நாட்கள்
₹2,5951.5GB/day, வரம்பற்ற அழைப்பு வசதி, 100 SMS/day365 நாட்கள்
₹601 டேட்டா add-on திட்டம்75GB டேட்டாஎதுவுமில்லை

திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், லைவ் டிவி மற்றும் செய்திகளுக்கென கிடைக்கும் Vi மூவிஸ் மற்றும் டிவி கிளாசிக் சேவையும் பயனர்களுக்கு கிடைக்கும். ஒரு வருடத்திற்கு 75 ஜிபி டேட்டா மற்றும் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் மொபைல் பதிப்பிற்கான அணுகலை ரூ.601 விலையிலான ஆட் ஆன் பேக்கும் வழங்கும். இந்த பூஸ்டர் பேக்கை ஏற்கனவே இருக்கும் ரீசார்ஜ் திட்டத்துடன் பயன்படுத்தலாம்.

இந்த ப்ரீபெய்ட் திட்டங்கள் Vi இன் ‘Binge All night’ மற்றும் ‘வீக்கெண்ட் டேட்டா ரோல்ஓவர்’ சலுகைகளுடன் கிடைக்கின்றன. ‘Binge All night’ சலுகையின் கீழ், Vi பயனர்கள் தினமும் காலை 12 மணி முதல் காலை 6 மணி வரை வரம்பற்ற தரவைப் பெறலாம். வீக்கெண்ட் டேட்டா ரோல்ஓவர் வசதி என்பது வாரநாட்களில் பயன்படுத்தப்படாத டேட்டாவை வார இறுதியில் பயன்படுத்த அனுமதிக்கிறது.

Views: - 256

0

0