ரோபோ வண்டுக்கும் இயற்கை வண்டுக்கும் சண்டை! ஊரே வேடிக்கை பார்க்குது! எது ஜெயித்தது? வீடியோவைப் பாருங்கள்

Author: Dhivagar
10 October 2020, 9:04 am
video of a robot beetle meeting a real one is so epic
Quick Share

இன்றைய காலக்கட்டத்தில் இயந்திரங்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவுகளுக்கான தேவை அதிகரித்து வருகிறது. இந்த  தேவைகளைப் பூர்த்தி செய்ய ரோபோக்களும் புதிதாக வடிவமைக்கப்பட்டு வருகின்றன. அவ்வாறு உருவாக்கப்படும் ரோபோக்கள் செயற்கை நுண்ணறிவு, இயந்திர கற்றல் போன்ற தொழில்நுட்பங்களுடன் மேம்படுத்தபடுகின்றன. 

இவற்றை எல்லாம் பார்க்கும்போது, எந்திரன் படத்தில் வரும் சிட்டி ரோபோ போல நமக்கு பல பயனளிக்கும் ரோபோக்களை நாம் உருவாக்கி கொண்டிருப்பதாக தெரிகிறது. இதற்கு ஒரு எடுத்துக்காட்டாக சமீபத்தில் இன்வெண்டோ ரோபோடிக்ஸ் நிறுவனத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட மித்ரா எனும் ஹியூமனாய்டு ரோபோ கொரோனா நோயாளிகளுக்கு உதவுவதைக் கண்டோம். 

ஆனால், என்னதான் நன்மைகள் என்று ஒரு பக்கம் இருந்தாலும் நிச்சயமாக தீமை என்ற மறுபக்கமும் இருக்கும் என்பதுவும் நம்மால் மறுக்க முடியாத உண்மைதான். சிட்டி ரோபோ  திடீரென  2.0 ஆகவும் மாறவும் கூடும். அதற்கு எடுத்துக்காட்டாக தான் இப்போது, ட்விட்டரில் ஒரு காணொளி பிரபலமாகி வருகிறது. 

ஒரு ரோபோ வண்டு ஒரு உண்மையான வண்டுடன் சண்டையிடும் காணொளி காட்சி இப்போது ட்விட்டரில் வெளியாகி இணையங்களில் பரவி வைரலாகிவருகிறது. இந்த  வீடியோ பார்க்கும் பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

இதை  பார்க்கும் பல மக்கள், மனிதர்களின் எதிர்காலமும் இப்படி தான் இருக்கப்போகிறதோ என்று கமென்டில் கவலையுடன் கூறி வருகின்றனர். இன்னும் சிலர் சண்டைக் காட்சியை ரசித்தவர்களாக, ஒரு தரப்பு உண்மையான வண்டுக்கும் மற்றொரு  தரப்பு ரோபோ வண்டுக்கும் ஆதரவாக கமெண்ட் தெரிவித்து வருகின்றனர். 

என்னதான், ரோபோ வண்டு இயற்கை வண்டுடன் போட்டியிட்டாலும், இறுதியில் ரோபோ வண்டை வீழ்த்தி இயற்கை வண்டு வெற்றி பெறுவதாக வீடியோ காண்பிக்கப்படுகிறது. இதை குறிப்பிட்டு பலரும், என்னதான் செயற்கை இயந்திரங்கள் வளர்ச்சியடைந்தாலும் அதன் ஆணி வேர் மனிதர்களின் கைகளிலேயே இருக்கும் என்றும் கருத்து தெரிவித்து வருகின்றனர். 

Views: - 52

0

0