பெட்ரோலுக்கு “நோ” மின்சாரத்துக்கு “எஸ்”! மின்சார சைக்கிளை உருவாக்கி அசத்திய விழுப்புரம் இளைஞன்!

19 July 2021, 1:24 pm
vilupuram youngster made an electric battery cycle
Quick Share

விழுப்புரம் மாவட்டம் பக்கமேடு கிராமத்தைச் சேர்ந்த பாஸ்கரன் எனும் விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த இளைஞர், 1 யூனிட் சார்ஜ் செய்தால் 50 கிமீ செல்லக்கூடிய மின்சார சைக்கிள் ஒன்றை வடிவமைத்துள்ளார். 

முதலில் லெட் ஆசிட் பேட்டரி பயன்படுத்துகையில், தொடர் தோல்விகள் சந்தித்ததை அடுத்து லித்தியம் ஃபெரோபாஸ்பேட் பேட்டரியை தானே உருவாக்கி பயன்படுத்தியுள்ளார்.

இதற்கென 24 வோல்ட், 18 Ah திறன் கொண்ட லித்தியம் ஃபெரோபாஸ்பேட் பேட்டரியை தானே உருவாக்கி  250 வாட்ஸ், 24 வோல்ட் திறன் கொண்ட மோட்டாருடன் பயன்படுத்தியுள்ளார். 

vilupuram youngster made an electric battery cycle

இந்த மின்சார சைக்கிள் அதிகபட்சம் மணிக்கு 30 கிமீ வேகத்தில் செல்லக்கூடியது என்றும்,  இதை தயார் செய்ய ரூ.20000 வரை செலவுகள் ஆனதாகவும் தெரிவித்துள்ளார்.

பல பேர் இகழ்ந்து பேசியும் தன் குடும்பத்தார் மற்றும் நண்பர்கள் கொடுத்த ஊக்கத்துடன் 10 வருட உழைப்புக்குச் சான்றாக இப்போது இந்த மின்சார சைக்கிளை உருவாக்கி அசத்தியுள்ளார்.

மோட்டார் உடன் இயங்கினாலும் அவ்வப்போது நாம் பெடல் செய்தால் கூடுதலாக மைலேஜ் கிடைக்கும் என்று பாஸ்கர் தெரிவித்துள்ளார்.

இது அவருடைய நான்காவது சைக்கிள் என்றும், இதற்கு முன்னதாகவே மூன்று சைக்கிள்களை வைத்து முயற்சி செய்ததாகவும் தெரிவித்துள்ளார்.

vilupuram youngster made an electric battery cycle

இந்த மின்சார சைக்கிளில் இவர்  பயன்படுத்தியுள்ள பேட்டரியை சுமார் 2000 முறை சார்ஜ் செய்து தொடர்ந்து பயன்படுத்த முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

யாரேனும், தங்களுக்கும் இது போன்ற சைக்கிள் வேண்டுமென்று கேட்டால் ஷீல்டு, பாதுகாப்பு உபகரணங்கள் எல்லாம் பொருத்தி ரூ.25000 விலைக்குத் தன்னால் கொடுக்க முடியும் என்றும் நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளார். 

சீக்கிரமே ஏதேனும் பணிக்குச் செல்லவிருப்பதாகவும், குறைந்தபட்சம் வருடத்திற்கு மாற்றுத் திறனாளிகளுக்கு 5 பேட்டரி சைக்கிளை தயார் செய்து இலவசமாக கொடுக்க வேண்டும் என்பதை தான் கனவாக கொண்டுள்ளதாகவும் பாஸ்கர் தெரிவித்துள்ளார்.

கனவுகள் மெய்ப்பட நாமும் வாழ்த்துவோம்.   

Views: - 124

0

0

Leave a Reply