விவோ நெக்பேண்ட் ஹெட்ஃபோன்ஸ் வெளியானது! விலை எவ்ளோ தெரியுங்களா?
4 March 2021, 5:36 pmவிவோ நிறுவனம் விவோ S9 மற்றும் விவோ S9e ஸ்மார்ட்போன்களுடன், விவோ தனது நெக்பேண்ட் வயர்லெஸ் ஹெட்செட்டையும் சீனாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த தயாரிப்பின் விலை 299 யுவான் (ரூ.3,370) மற்றும் இது ஃபெதர் கிரே, கருப்பு மற்றும் நீல வண்ணங்களில் வருகிறது.
புதிய ஹெட்செட் நெக் பேண்ட் ஸ்டைலில் உள்ளது மற்றும் வசதியாக அணிவதற்கு ஏற்றவாறு வடிவமைக்கப்பட்டுள்ளது. ஜப்பானின் டைகோகு காப்பர்-கிளாட் அலுமினிய சுருளுடன் 11.2 மிமீ டைனமிக் டிரைவர் உள்ளது, அவை சிறந்த இசை செயல்திறனுக்காக கோல்டன் இயர்ஸ் அகௌஸ்டிக் டீம் மூலம் டியூன் செய்யப்பட்டுள்ளது. இது 80 ms குறைந்த லேட்டன்சி ஆடியோவைக் கொண்டுள்ளது, இது கேமிங் மற்றும் வீடியோ அழைப்புகளுக்கு ஏற்றது.
விவோ நெக்பேண்ட் வயர்லெஸ் ஹெட்செட் இணைப்பிற்காக புளூடூத் v5.0 ஐப் பயன்படுத்துகிறது, இது இணக்கமான சாதனங்களுடன் 10 மீட்டர் வரை வேகமான இணைப்பை அனுமதிக்கிறது, மேலும் விவோவின் Jovi அசிஸ்டன்ட் உடன் வேலை செய்கிறது.
அணியக்கூடிய சாதனம் குயிக் சுவிட்ச், வால்யூம், ஸ்கிப் டிராக், போன் கால்ஸ், வாய்ஸ் அசிஸ்டன்ட் ஆகியவற்றுக்கு ஒரு பொத்தானைக் கொண்டுள்ளது. நீர் மற்றும் வியர்வை எதிர்ப்பிற்கான IPX 4 மதிப்பீட்டையும் கொண்டுள்ளது.
ஹெட்செட் 129 mAh பேட்டரியைக் கொண்டுள்ளது, இது 50% -60% வால்யூம் அளவிலும் 18 மணிநேர டாக்டைமையும் 18 மணிநேர மியூசிக் பிளேபேக்கையும் வழங்குவதாகக் கூறுகிறது. இது யூ.எஸ்.பி-C வழியாக விரைவான சார்ஜிங்கையும் ஆதரிக்கிறது, 10 நிமிட சார்ஜிங்கிற்குப் பிறகு 5 மணிநேர கேட்கும் நேரத்தை வழங்குகிறது. இதன் எடை 24 கிராம் ஆகும்.
0
0