அறிமுகத்திற்கு முன்னதாக விவோ Y1s போனின் விலை கசிந்தது! ஜியோ உடன் கூட்டணி! முழு விவரம் இங்கே

25 November 2020, 4:05 pm
Vivo Y1s Price Leaked Ahead Of Launch; Tie Up With Reliance Jio Tipped
Quick Share

விவோ ஸ்மார்ட்போன்கள் அனைத்து தேவைகளுக்கும் ஏற்ப பரந்த பட்ஜெட் வரம்பைக் கொண்டுள்ளது. ஆகஸ்ட் மாதத்தில் கம்போடியாவில் அறிமுகம் செய்யப்பட்ட விவோ Y1s இந்த பட்டியலில் இப்போது சமீபத்திய சேர்ப்பாக வந்துள்ளது. அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு முன்னதாக பட்ஜெட் விலையிலான இந்த தொலைபேசியின் விலை இறுதியாக தெரியவந்துள்ளது.

விவோ Y1s விலைக் கசிந்தது

விவோ Y1s வழங்கும் அம்சங்களைப் பார்க்கும்போது, ​​இது பட்ஜெட் பிரிவில் வரும் என்று முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்டது. டிப்ஸ்டர் முகுல் சர்மா கூறுகையில், விவோ Y1s இந்தியாவில் சுமார் ரூ.8,000 விலைக்கொண்டிருக்கும் என்று தெரிவித்துள்ளார். இந்த தொலைபேசி டிசம்பர் மாதத்தில் இந்திய சந்தையில் வரும் என்று வதந்தி பரவியுள்ளது, விரைவில் விநியோகமும் தொடங்கும் என்று கூறப்படுகிறது.

வரவிருக்கும் பட்ஜெட் தொலைபேசியில் விவோ ஜியோவுடன் கூட்டு சேர்ந்துள்ளது. வாங்குபவர் தங்கள் விவோ Y1s போனில் ஜியோ நெட்வொர்க் தேர்வுச் செய்தால், அதிக நன்மைகளை பெறலாம். உதாரணமாக, வாடிக்கையாளர்களுக்கு  ரூ.799 வரை ஜியோ சலுகைகள் கிடைக்கும்.

விவோ Y1s அம்சங்கள்

இந்த ஸ்மார்ட்போன் HD திரை தெளிவுத்திறன் உடன் ஒற்றை 13MP முதன்மை கேமரா மற்றும் 5MP செல்ஃபி கேமராவைக் கொண்டிருக்கும்.

ஹூட்டின் கீழ், விவோ Y1s மீடியாடெக் ஹீலியோ P35 சிப்செட் உடன் 2 ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி இயல்புநிலை சேமிப்பகத்துடன் இணைக்கப்படும், இது மைக்ரோ SD கார்டு வழியாக மேலும் விரிவாக்கவும் வாய்ப்புள்ளது. இந்த போன் ஆண்ட்ராய்டு 10 ஐ ஃபன் டச் OS தனிப்பயன் ஸ்கின் உடன் இயக்குகிறது. ரிவர்ஸ் சார்ஜிங்கை ஆதரிக்கும் 4,030 mAh பேட்டரியும் உள்ளது.

Views: - 0

0

0