புதிய பொலிவில் இரட்டை மோட்டார்கள் உடன் வோக்ஸ்வாகன் ID.4 GTX அறிமுகம் | விலை & விவரங்கள்

30 April 2021, 3:43 pm
Volkswagen ID.4 GTX unveiled with refreshed look
Quick Share

ஜெர்மன் வாகன உற்பத்தியாளரான வோக்ஸ்வாகன் ID வாகனப்பிரிவில் சமீபத்திய மாடலாக, வோக்ஸ்வாகன் ID.4 GTX எனும் உயர் செயல்திறன் கொண்ட மின்சார வாகனத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த வோக்ஸ்வாகன் ID.4 GTX க்கான விநியோகங்கள் இந்த ஆண்டு முதல் தொடங்கும்.

சிறப்பம்சங்களைப் பொறுத்தவரை, இந்த பிரீமியம் வாகனம் ஒப்பனை புதுப்பிப்புகளை உட்புறத்திலும் வெளிப்புறத்திலும் பெற்றுள்ளது மற்றும் இரட்டை மோட்டார் மின்சார பவர் ட்ரெயினிலிருந்து ஆற்றல் பெறுகிறது. இது ஒரே சார்ஜிங் உடன் 480 கி.மீ. வரை பயணம் செய்யக்கூடியது.

கூடுதல் விவரங்கள் இங்கே:

வோக்ஸ்வாகன் ID.4 GTX ஒரு திடமான பொன்னட், நேர்த்தியான ஹெட்லைட்கள், தேன்கூடு வடிவிலான அமைப்பைக் கொண்ட DRL ஆகியவற்றைக் கொண்டுள்ளது.

இது கருப்பு நிறத்திலான B-பில்லர்ஸ், உடல் வண்ணத்திலேயே ஆன ORVM கள் மற்றும் டிசைனர் வீல்ஸ் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இது ஒரு விண்டோ வைப்பர் மற்றும் 3D LED டெயில்லாம்ப்கள் X motif உடன் பின்புறத்தில் கிடைக்கின்றன.

இந்த காரில் கருப்பு நிறத்திலான ரூஃப் மற்றும் ஸ்பாய்லர் உள்ளது, அதே நேரத்தில் ரூஃப் பிரேம் பட்டியில் உயர்-பளபளப்பான ஆந்த்ராசைட் ஃபினிஷ் உள்ளது.

வோக்ஸ்வாகன் ID.4 GTX இரண்டு மின்சார மோட்டார்கள் மற்றும் 77 KWh லித்தியம் அயன் பேட்டரி பேக்கைக் கொண்டுள்ளது. இந்த அமைப்பு 295 HP ஒருங்கிணைந்த வெளியீட்டை வழங்குகிறது. 

இந்த  வாகனம் மணிக்கு 0 முதல் 100 கிமீ வேகத்தை முதல் 6.2 வினாடிகளில் எட்டும் திறன் கொண்டது. இது அதிகபட்சமாக மணிக்கு 180 கிமீ வேகத்தை வழங்கக்கூடியது. மேலும் ஒரு முறை சார்ஜ் செய்தால் 480 கிமீ வரை பயணிக்கும் செயல்திறன் கொண்டது.

வோக்ஸ்வாகன் ID.4 GTX காரில் உள்ள கேபினில் உள்ள டாஷ்போர்டின் மேல் பகுதி மற்றும் கதவுகளில் லீதரெட் இன்சர்ட்ஸ் டார்க் ‘X-ப்ளூ’ ஷேடில்  முடிக்கப்பட்டுள்ளன. இதற்கிடையில், இருக்கை, சன்னல் பேனல் டிரிம்ஸ் மற்றும் ஸ்டீயரிங் ஆகியவற்றில் சிவப்பு நிற டிசைன்களும் காணப்படுகின்றன.

இது ஆப்பிள் கார்ப்ளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ ஆதரவுடன் 10.0 இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் கன்சோலைக் கொண்டுள்ளது.

பாதுகாப்பிற்காக, முன் இருக்கைகளுக்கு இடையில் ஒரு ஏர்பேக் மற்றும் ஒரு புறப்படும் எச்சரிக்கை ஆகியவை வழங்கப்பட்டுள்ளன.

ஐரோப்பாவில், வோக்ஸ்வாகன் ID.4 GTX கிராஸ்ஓவர் ஆரம்ப விலை €50,416 (சுமார் ரூ.45.2 லட்சம்) மற்றும் இந்த ஆண்டு விநியோகங்கள் தொடங்கும். இருப்பினும், இந்தியாவில் இதன் அறிமுகம் குறித்த விவரங்கள் எதுவும் தற்போது வெளியாகவில்லை.

Views: - 127

0

0

Leave a Reply