விண்வெளியில திருமணம் செஞ்சுக்கணுமா? எவ்ளோ செலவாகும் தெரியுமா? அங்க இருக்க வசதிகள் தான் ஹைலைட்டே! படிச்சு பாருங்க…

Author: Dhivagar
27 July 2021, 5:17 pm
Want to Get Married in Space? How to Book Space Perspective Balloon Flight, Price, Launch, and More
Quick Share

முதலில் பாரம்பரியமாக தரையில் அழகாக ஒரு கோவிலில் நடந்துக்கொண்டிருந்த திருமணம், இப்போதோ கடலின் மேல், கடலுக்குள், ஆகாயத்தில் என சாகச நிகழ்வாக மாறிவிட்டது. இப்போது சாகச நிகழ்வாக மாறிக்கொண்டிருக்கும் திருமணங்கள் விரைவில் சரித்திர நிகழ்வாகவும் மாறப்போகிறது. இதற்கு மேலும் சாகசம் என்றால் விண்வெளிக்குச் சென்று தான் செய்ய வேண்டும் என்று தோன்றுகிறதல்லவா? ஆம். நீங்கள் நினைத்தது சரி  அதே தான் நிகழவிருக்கிறது.

Want to Get Married in Space? How to Book Space Perspective Balloon Flight, Price, Launch, and More

இந்த சாகச திருமண நிகழ்வு 2024 ஆம் ஆண்டில் சாத்தியமாகும் என்று புளோரிடாவை தளமாகக் கொண்ட “ஸ்பேஸ் பெர்ஸ்பெக்டிவ்” நிறுவனம் தெரிவித்துள்ளது. கடல் மட்டத்திலிருந்து 100,000 அடி (19 மைல்) உயரத்தில் மிதக்கும் ஒரு கால்பந்து மைதான அளவிலான விண்வெளி பலூன் மூலம் ஏந்தி செல்லப்படும் ஒரு காப்ஸ்யூலுக்குள் தம்பதிகள் திருமணம் செய்து கொள்ளமுடியும்.

இப்படி பூமியின் கடல் மட்டத்திரிலிருந்து 100000 அடி உயரத்தில் சாகச திருமணம் செய்து கொள்ள விரும்பும் அல்லது வேறு ஏதேனும் நிகழ்வுகளை நடத்த விரும்புவோர்களுக்காக ஸ்பேஸ் பெர்ஸ்பெக்டிவ் நிறுவனம் தற்போது அதன் காப்ஸ்யூல்களில் விமானங்களை $125,000 (£91,000) அதாவது இன்றைய இந்திய மதிப்பில் ஒருவருக்குச் சுமார் 93 லட்சம் விலைக்கு விற்பனைச் செய்கிறது. 

Want to Get Married in Space? How to Book Space Perspective Balloon Flight, Price, Launch, and More

நிறுவனத்தின் பிரம்மாண்டமான விண்வெளி பலூன்களால் எடுத்துச் செல்லப்படும் காப்ஸ்யூல்களில் எட்டு நபர்கள் வரைச் செல்லலாம். நமது கிரகத்தின் மேற்பரப்பிலிருந்து 100,000 அடி (19 மைல்) உயரமுள்ள அடுக்கு மண்டலத்திற்குள் செல்லும் இந்த பயணம் 6 மணி நேரம் வரை நீடிக்கும்.

சில முக்கியமான நிகழ்வுகளுக்காக வாடிக்கையாளர்கள் ஏற்கனவே முழு காப்ஸ்யூல்களையும் வாங்கியுள்ளனர், மேலும் சிலர் தங்கள் திருமணங்களை அங்கேயே நடத்த விருப்பம் தெரிவித்துள்ளார் என்று ஜூன் மாத இறுதியில் விமானங்களை விற்பனை செய்யத் தொடங்கிய ஸ்பேஸ் பெர்ஸ்பெக்டிவ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Want to Get Married in Space? How to Book Space Perspective Balloon Flight, Price, Launch, and More

காப்ஸ்யூலுக்குள் இருக்கும் போது பயணிகள் பூமியின் 360 டிகிரி காட்சிகளைப் பார்க்க முடியும். இந்த காப்ஸ்யூலுக்குள் ஒரு குளியலறை, பார் மற்றும் வைஃபை வசதி ஆகியவையும் இருக்கும் என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

கடந்த ஜூன் மாதத்தில், நிறுவனத்தின் சோதனை வாகனம் ஆன நெப்டியூன் ஒன், நாசாவின் கென்னடி விண்வெளி மையத்தை ஒட்டிய ஸ்பேஸ் கோஸ்ட் ஸ்பேஸ்போர்ட் மையத்திலிருந்து வெற்றிகரமாக ஏவப்பட்டது.

Want to Get Married in Space? How to Book Space Perspective Balloon Flight, Price, Launch, and More

இன்னொரு சுவாரசியமான தகவல் என்னவென்றால், 2024 ஆம் ஆண்டிற்கான டிக்கெட்டுகள் முழுமையாக விற்றாகிவிட்டதாம்,. வேண்டுமென்றால் நிறுவனத்தின் வலைத்தளத்தில் 2025 ஆம் ஆண்டிற்கான டிக்கெட்டுகளை முன்பதிவுச் செய்யலாம் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. மணிக்கு 12 மைல் வேகத்தில் இந்த பயணம் நிகழும். 30 கிமீ உயரத்தை எட்ட சுமார் 2 மணி நேரம் ஆகும்.

பயணிகள் உள்ளிருந்தவாறு உணவுகள் மற்றும் பானங்களை ஆர்டர் செய்ய முடியும். அதே போல காப்ஸ்யூலுக்குள் இருந்து போட்டோ எடுக்க ஏதுவாக கிளேர் அடிக்காத ஜன்னல்கள் பொறுத்தப்பட்டிருக்கும். 

Want to Get Married in Space? How to Book Space Perspective Balloon Flight, Price, Launch, and More

கீழிறங்கும் போது, இந்த பெரிய பலூனின் காற்று வெளியேற்றப்பட்டு காப்ஸ்யூல் ஒரு பெரிய நீர் நிலையில் தரையிறக்கப்படும்.

Views: - 344

0

0