நீல நிற ஆதார் கார்டு என்பது என்ன… இதற்கு எப்படி விண்ணப்பிப்பது…???

Author: Hemalatha Ramkumar
13 October 2021, 4:40 pm
Quick Share

இந்தியாவில் 2018 ஆம் ஆண்டு ஐந்து வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு நீல நிற ஆதார் கார்டான ‘பால் ஆதார்’ கார்டு அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால் இந்த ஆதார் கார்டு ஐந்து வயதை கடந்து விட்டால் செல்லுபடியாகாது. வழக்கமான ஆதார் கார்டிற்கு விண்ணப்பிக்கும் அதே முறை இதற்கும் செல்லும்.

இரண்டு ஆதார் கார்டுகளும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியானவை தான். நீல நிற ஆதார் அட்டையில் குழந்தைகளின் பயோமெட்ரிக் தகவல்கள் எதுவும் இருக்காது. குழந்தை ஐந்து வயதை கடந்தவுடன் பயோமெட்ரிக் தகவல்கள் பதிவேற்றப்பட வேண்டும்.

அது மட்டும் இல்லாமல் பதினைந்து வயது ஆனவுடன் டீனாதார் அட்டைதாரர்களுக்கான பயோமெட்ரிக் தகவல்கள் சேர்க்கப்பட்டு இருக்க வேண்டும். பள்ளிகள், கல்லூரிகள், மருத்துவமனைகள் என பல இடங்களில் ஆதார் அட்டை கேட்கப்படுவதால் உங்கள் குழந்தைக்கும் ஆதார் கார்டு எடுப்பது அவசியம்.

பால் ஆதார் எப்படி வாங்குவது?
பால் ஆதார் அட்டை வாங்க பின்வரும் மூன்று ஆவணங்களில் ஒன்றை நீங்கள் பயன்படுத்தலாம்.
●பள்ளி அடையாள அட்டை
●பெற்றோர் பிறப்பு சான்றிதழ்
●மருத்துவமனை டிஸ்சார்ஜ் சீட்டு

இந்த மூன்று ஆவணங்களில் ஒன்றை எடுத்துக் கொண்டு இசேவை மையத்திற்கு செல்லுங்கள். அங்கு பால் ஆதார் கார்டுக்கான படிவத்தை நிரப்பி ஆன்லைனில் பதிவேற்றவும். உங்களின் ஆதார் அட்டை மற்றும் மொபைல் எண் கேட்கப்படும். பயோமெட்ரிக் தகவல்கள் தேவையில்லை என்பதால் வெறுமனே ஒரு போட்டோ மட்டும் எடுக்கப்படும். இந்த செயல்முறை முடிந்தவுடன் சரிபார்ப்பு முடிந்து விட்டது என்பது குறித்த SMS யை நீங்கள் பெறுவீர்கள். 60 நாட்களுக்குள் உங்கள் குழந்தைக்கான பால் ஆதார் வந்துவிடும்.

Views: - 247

0

0

Leave a Reply