வாட்ஸ்அப்பில் ஷாப்பிங் செய்ய புதிய வசதி அறிமுகம்!

10 November 2020, 4:13 pm
WhatsApp adds a Shopping Button inside WhatsApp Business Chats
Quick Share

வாட்ஸ்அப் கடந்த ஒரு வாரமாக ஒரு சில புதிய அம்சங்களை அறிமுகம் செய்து வருகிறது. இப்போது பட்டியலில் சேர மற்றொரு அம்சம் வணிக கணக்குகளுக்கான ஷாப்பிங் பொத்தான் தான். இந்த பொத்தானின் உதவியுடன், நீங்கள் வணிகத்தின் தயாரிப்பு பட்டியலைத் திறக்க முடியும்.

இந்த புதிய பொத்தான் அம்சம் ஏறக்குறைய 2 மாதங்களுக்கு முன்பு WABetaInfo இன் ஒரு APK டியர்டவுன் மூலம் தெரியப்படுத்தப்பட்டது. இப்போது, உங்கள் ​​வணிகத்தில் ஒரு சில தயாரிப்புகளுடன், அதற்கான பட்டியலும் இருந்தால், அதை வாட்ஸ்அப் பிசினஸ் கணக்கு மூலமாக கேட்டலாக் பிரிவில் பட்டியலிட முடியும். அழைப்பு ஐகானுக்கு அடுத்ததாக புதிய கேட்டலாக் பொத்தான் காண்பிக்கப்படும்.

முன்னதாக, ஒருவர் அந்தந்த பட்டியலைத் திறந்து பார்க்க வேண்டுமெனில் வாட்ஸ்அப்பில் ஒருவரின் சுயவிவரத்தைத் திறக்க வேண்டியிருந்தது, ஆனால் அது இப்போது மாறிவிட்டது.

அழைப்பு ஐகான் இப்போது புதிய கேட்டலாக் ஷார்ட்கட் ஆக மாற்றப்படும், மேலும் அதற்கு அடுத்ததாக அழைப்பு ஐகான் கிடைக்கும். நீங்கள் அழைப்பு பொத்தானைக் கிளிக் செய்த பிறகு, குரல் அல்லது வீடியோ அழைப்பைச் செய்ய எப்போதும் போல உங்களுக்கு விருப்பம் இருக்கும்.

வாட்ஸ்அப்பின் தகவலின்படி, ‘ஒவ்வொரு நாளும் 175 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வாட்ஸ்அப் வணிகக் கணக்குகளுக்கு செய்தி அனுப்புகிறார்கள், மேலும் 40 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் ஒவ்வொரு மாதமும் வணிக அட்டவணையைப் பார்க்கிறார்கள், இதில் இந்தியாவில் 3 மில்லியனுக்கும் அதிகமானோர் உள்ளனர்’.

மக்கள் கிடைக்கக்கூடிய தயாரிப்புகளை சரிபார்த்து, அரட்டையிலிருந்தவாறே கொள்முதல் செய்வதற்கான வழிகளை விரிவுபடுத்த விரும்புவதாகவும், புதிய ஷாப்பிங் பொத்தானை அறிமுகப்படுத்துவதன் மூலம் இது மேலும் சாத்தியமான ஒன்றாக இருக்கும்  என்றும் அக்டோபரில் வாட்ஸ்அப் அறிவித்தது. 

Views: - 22

0

0