வாட்ஸ்அப்புக்கு போட்டியாக முன்னாள் வாட்ஸ்அப் CBO உருவாக்கிய HalloApp | விவரங்கள் இங்கே

21 July 2021, 12:47 pm
WhatsApp CBO Neeraj Arora launches HalloApp
Quick Share

வாட்ஸ்அப்பின் முன்னாள் தலைமை வணிக அதிகாரி நீரஜ் அரோரா தனது புதிய தொடக்க நிறுவனமான ஹல்லோஆப்பை அறிமுகம் செய்துள்ளார்.

ஹல்லோஆப் என்பது மக்கள் தங்கள் நெருங்கிய நண்பர்களுடன் இணைப்பில் இருக்கவும் மற்றும் தகவல்களை பகிர்ந்து கொள்ளவும் எளிய மற்றும் பாதுகாப்பான, தனிப்பட்ட இடமாக இருக்கும் என்று இதன் அறிமுகத்தின் போது ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

இந்த ஹல்லோஆப்பில் விளம்பரங்கள், ஃபாலோவர்ஸ், லைக்ஸ் என எதுவுமே இருக்காது என்றும், இதில் மெசேஜ்கள் end-to-end encrypt செய்யப்பட்டு பாதுகாப்புடன் இருக்கும் என்றும் நீரஜ் தெரிவித்துள்ளார்.

WhatsApp CBO Neeraj Arora launches HalloApp

இந்த ஹல்லோஅப் உங்கள் வாழ்க்கையின் உண்மையான உறவுகளுடன் உங்களை இணைக்க தனிநபரின் தொலைபேசி முகவரி புத்தகத்தைப் பயன்படுத்துகிறது, அதை தவிர வேறு எந்த தகவலையும் இந்த ஆப் பெறுவதில்லை.

ஏற்கனேவே, பேஸ்புக் நிறுவனத்திடம் வாட்ஸ்அப், மெசெஞ்சர் போன்ற மிகப்பெரிய இன்ஸ்டன்ட் மெசேஜிங் தளங்கள் இருக்கும் வேளையில், அதே சமயம் சிக்னல்,டெலிகிராம் போன்ற வேறு பல செயலிகளும் மக்களிடம் பிரபலம் அடைந்துள்ள நிலையில் இந்த ஹல்லோஅப் எப்படி போட்டியிட்டு ஜெயிக்கும் என்பதை பார்க்க சுவாரசியமாக இருக்கும்.

Views: - 119

0

0

Leave a Reply