குட்டி கிளப்ஹவுஸ் போல மாறியது வாட்ஸ்அப்! வந்தாச்சு செம அப்டேட்!

21 July 2021, 9:45 am
WhatsApp introduces joinable group calls
Quick Share

வாட்ஸ்அப்பில் ஒரு புதிய அம்சம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த அம்சத்துடன் பயனர்கள் குரூப் வாய்ஸ் கால் அல்லது குரூப் வீடியோ கால் தொடங்கிய பிறகும் கூட அதில் சேர்ந்துக்கொள்ள முடியும். இந்த சேரக்கூடிய அழைப்புகள் அம்சம் அறிமுகமானதை அடுத்து, வாட்ஸ்அப்பில் உள்ள ‘Calls’ தாவலுக்குச் செல்வதன் மூலம் குழு அழைப்புகளில் ஈசியாக இணைந்துக்கொள்ள முடியும். 

உண்மையில் சொல்லப்போனால், இது ஒரு கிளப்ஹவுஸில் இருப்பதைப் போன்ற மினி அம்சம் என்று சொல்லலாம். ஏனென்றால், கிளப்ஹவுஸில் தான் ஏற்கனவே நடந்துக்கொண்டிருக்கும் உரையாடலில் சேர்ந்துக்கொள்வதற்கான வசதி கிடைக்கும் என்பது கிளப்ஹவுஸ் பயன்படுத்திய எல்லோருக்குமே தெரியும்.  இப்போது அதே போன்ற ஒரு அம்சம் தான் வாட்ஸ்அப்பிலும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

என்ன வித்தியாசங்கள் என்றால், கிளப்ஹவுஸில் யாருடன் வேண்டுமானாலும் அழைப்புகளில் இணைந்துக்கொள்ள முடியும். ஆனால், வாட்ஸ்அப்பில் தெரிந்தவர்கள் குரூப் காலில் இருக்கும்போது மட்டுமே நம்மால் அதில் இணைய முடியும்.   

வாட்ஸ்அப் அறிமுகம் செய்த இந்த அம்சம் ஒரு புதிய call info திரையைக் கொண்டுள்ளது, இது அழைப்பில் யார் யாரெல்லாம் இருக்கிறார்கள் என்பதைப் பார்க்க பயனர்களை அனுமதிக்கிறது, மேலும் இதுவரை சேராத அழைக்கப்பட்ட பயனர்களின் பட்டியலையும் காண்பிக்கும். 

இந்த புதிய புதுப்பிப்புக்கு முன், அழைப்பு அறிவிப்பைத் தவறவிட்ட பயனர்கள் அழைப்பாளரை மீண்டும் குரூப் காலில் சேர்க்குமாறு கேட்க வேண்டும். இது மிகவும் சிரமமான செயல்முறையாக இருந்தது. 

ஆனால் இப்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ள புதிய அம்சம் பயனர்கள் குழு அழைப்பில் எப்போது சேர விரும்புகிறார்கள் என்பதை அவர்களையே தீர்மானிக்க விட்டுவிடுகிறது. மேலும், பயனர்கள் ஏற்கனவே அழைப்பிலிருந்து விலகினாலும், அழைப்பு தொடர்ந்து நடந்து கொண்டிருந்தால் மீண்டும் சேர்ந்துக்கொள்ள முடியும்.

புதிய புதுப்பிப்பு புதிய வாட்ஸ்அப் அப்டேட்டுடன் கிடைக்கும், இது விரைவில் அனைத்து ஆண்ட்ராய்டு மற்றும் iOS சாதனங்களையும் எட்டும். 

Views: - 105

0

0

Leave a Reply