இன்டர்நெட் வசதியே இல்லாமல் வாட்ஸ்அப் பயன்படுத்த முடியுமா?! தெரிஞ்சா ஷாக் ஆகிடுவிங்க!

Author: Dhivagar
31 March 2021, 11:34 am
WhatsApp may soon work without your phone and internet
Quick Share

உலகெங்கிலும் உள்ள வாட்ஸ்அப் பயனர்களுக்கு ஒரு நல்ல செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. பேஸ்புக்கிற்குச் சொந்தமான மெசேஜிங் தளமான வாட்ஸ்அப், iOS மற்றும் ஆன்ட்ராய்டு பீட்டா பயனர்களுக்கான வாட்ஸ்அப் வெப் பீட்டா திட்டத்தில் வேலைச் செய்வதாக கூறப்படுகிறது, இது பயனர்களை இணையத்துடன் இணைக்காமல் சாதனத்தை பயன்படுத்த அனுமதிக்கும் ஒரு புதிய நுட்பமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

வாட்ஸ்அப்பைக் கண்காணிக்கும் வலைத்தளமான WABetaInfo இன் தகவலின்படி, இந்த திட்டம் வாட்ஸ்அப் மெசஞ்சர் மற்றும் வாட்ஸ்அப் பிசினஸ் பயன்பாடுகளுடன் இணக்கமானதாக இருக்கும். இது பல சாதன ஆதரவு செயல்பாட்டைச் சோதிக்க பயன்பாட்டிற்கு உதவியாக இருக்கும்.

இந்த தகவலை WABetaInfo ட்விட்டர் தளத்தில் பகிர்ந்துள்ளது. WABetaInfo, பகிர்ந்த ஸ்க்ரீன்ஷாட்கள் வாட்ஸ்அப் வெப் பீட்டா திட்டத்தில் சேர்ந்தவுடன் Delete For Everyone போன்ற வாட்ஸ்அப்பின் பல அம்சங்கள் பயனர்களுக்கு வேலை செய்யாது என்றும் சுட்டிக்காட்டியுள்ளன.

இதற்கிடையில், இந்த திட்டத்திற்குப் பதிவுசெய்யப்பட்ட பயனர்கள் மற்றவர்களுடன் அரட்டை அடிக்க அதை சமீபத்திய பதிப்பிற்கு புதுப்பிக்க வேண்டிய கட்டாயம் இருக்கும் என்று வாட்ஸ்அப் குறிப்பிட்டது. வாட்ஸ்அப்பின் சமீபத்திய பதிப்பை மற்ற நபர் பயன்படுத்தாவிட்டால் அழைப்புகள் மற்றும் செய்திகள் அம்சம் என இரண்டுமே பயன்படுத்தமுடியாது.

இந்த திட்டத்தில் சேரும் பயனர்கள் பேஸ்புக் போர்ட்டல் உள்ளிட்ட நான்கு டெஸ்க்டாப் சாதனங்களை ஒரே நேரத்தில் இணைக்க முடியும் என்று ஸ்கிரீன்ஷாட்கள் மேலும் வெளிப்படுத்துகின்றன. இந்த திட்டத்தில் சேருவதற்கான விருப்பம் வாட்ஸ்அப் வெப் / டெஸ்க்டாப் விருப்பத்தின் கீழ் Settings மெனுவில் கிடைக்கும் என்பதையும் ஸ்கிரீன் ஷாட்கள் வெளிப்படுத்தின.

பயனர்கள் வாட்ஸ்அப் வெப் பீட்டா புரோகிராமைக் கிளிக் செய்தவுடன், அவர்கள் Join the new WhatsApp Web Beta, which no longer requires that you keep your phone connected என்ற செய்தி தோன்றும். அதாவது, “புதிய வாட்ஸ்அப் வெப் பீட்டாவில் சேருங்கள், இனி உங்கள் தொலைபேசியை தொடர்ந்து இணைப்பில் வைத்திருக்க வேண்டிய அவசியமில்லை” என்று கூறப்படும் ஒரு வரவேற்பு மெசேஜ் காண்பிக்கப்படும். ‘Got it’ பொத்தானைக் கிளிக் செய்தால் பயனர்கள் இந்த புதிய திட்டத்தில் சேர முடியும். இருப்பினும், இந்த திட்டம் செயல்பாட்டுக்கு வரவில்லை.

இதற்கிடையில், ஆண்ட்ராய்டு மற்றும் iOS க்கான வாட்ஸ்அப்பில் குரல் செய்திகளுக்கான பின்னணி வேகத்தை மாற்ற பேஸ்புக்கிற்குச் சொந்தமான செய்தியிடல் தளம் அதிகாரப்பூர்வமாக செயல்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த அம்சமும் வளர்ச்சிப்பணிகளில் உள்ளது, எனவே இதுவும் பொது பயன்பாட்டிற்குக் கிடைக்கவில்லை.

Views: - 82

0

0