NPCI அனுமதியுடன் இந்தியாவில் வாட்ஸ்அப் பே அறிமுகம் | முழு விவரம் இங்கே

6 November 2020, 8:35 am
WhatsApp Pay is officially available to all users in India over two years after testing the service back in early 2018.
Quick Share

இந்தியாவில் இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக பீட்டா பதிப்பில் மட்டுமே இயக்கி கொண்டிருந்த பின்னர்  வாட்ஸ்அப் இறுதியாக UPI அடிப்படையிலான கட்டண முறையை இந்தியாவில் தொடங்க NPCI ஒப்புதல் அளித்துள்ளது. 

வாட்ஸ்அப் பே என்பது அரட்டை மூலம் பண பரிவர்த்தனைகளைச் செய்யும் கொடுப்பனவு முறையாகும். இந்த வாட்ஸ்அப் பே அம்சத்தின் மூலம் வாட்ஸ்அப் பயனர்கள் தங்கள் தொடர்பில் இருப்பவர்களுக்கு வாட்ஸ்அப் வழியாக பரிவர்த்தனை செய்ய முடியும். இது UPI- அடிப்படையிலான கொடுப்பனவு சேவையாகும், இது பணத்தை அனுப்பவும் பெறவும் உங்களை அனுமதிக்கிறது. இந்த முறை இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் (NPCI) உருவாக்கியது. 

பேஸ்புக்கிற்கு சொந்தமான நிறுவனம் இப்போது இந்தியாவில் ஆண்ட்ராய்டு மற்றும் iOS இல் உள்ள அனைத்து பயனர்களுக்கும் வாட்ஸ்அப் பே கிடைக்கும் என்று அறிவித்துள்ளது.

ஒவ்வொரு கட்டமாக வாட்ஸ்அப் பே அம்சத்தை இந்தியாவில் விரிவுபடுத்த தேசிய கட்டணக் கழகம் (NPCI) வியாழக்கிழமை ஒப்புதல் அளித்தது. அதன்படி முதல் கட்டமாக 20 மில்லியன் பயனர்களுக்கு வாட்ஸ்அப் பே வழங்க NPCI அனுமதித்துள்ளது. வாட்ஸ்அப் இந்தியாவில் மொத்தமாக 400 மில்லியன் பயனர்களைக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

WhatsApp Pay is officially available to all users in India over two years after testing the service back in early 2018.

வாட்ஸ்அப் பே பத்து பிராந்திய இந்திய மொழிகளில் கிடைக்கிறது, மேலும் இது பயன்பாட்டின் சமீபத்திய பதிப்பில் இருக்கும் iOS மற்றும் Android பயனர்களால் பயன்படுத்தப்படலாம். 

வாட்ஸ்அப் பயனர்கள் இந்த புதிய அம்சத்தைப் பயன்படுத்த UPI முறையை ஆதரிக்கும் வங்கியுடன் டெபிட் கார்டு வைத்திருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

Views: - 15

0

0