அட இதை எதிர்பார்க்கவே இல்லையே! வாட்ஸ்அப்ல வரப்போகுது அசத்தலான புது அம்சம்!
Author: Hemalatha Ramkumar10 August 2021, 3:30 pm
- வாட்ஸ்அப் தனது மொபைல் பயன்பாட்டுக்கும் வாட்ஸ்அப் வெப் பதிப்பிற்கும் பல்வேறு புதிய அம்சங்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வரிசையில், இப்போது வாட்ஸ்அப் வெப் பதிப்பிற்கு இணையதளத்தில் வாட்ஸ்அப் பல புதிய அம்சங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.
- இதில் வாட்ஸ்வெப்பின் browser mode இல் போட்டோக்களை எடிட் செய்வதற்கான அம்சத்தை அதன் பீட்டா பதிப்பில் சேர்த்துள்ளது.
- இதுநாள் வரையில், இந்த போட்டோ எடிட்டிங் அம்சம் வாட்ஸ்அப்பில் மொபைல் ஆப் பதிப்பில் மட்டுமே கிடைத்து வருகிறது.
- இதனால், டெஸ்க்டாப்பில் வாட்ஸ்அப் வெப் ஆப்பயன்படுத்தும் பலரும் இந்த அம்சத்தைப் பெறமுடியாமல் இருந்தது.
- இனிமேல் அந்த கவலை இல்லை. டெஸ்க்டாப்பின் வாட்ஸ்அப் வெப் பதிப்பிலும் போட்டோக்களை எடிட் செய்து அனுப்ப முடியும்.
- இந்த அம்சம் மட்டுமல்லாது அதன் ஸ்மார்ட்ஃபோன் பயன்பாட்டிற்கான புதிய ஈமோஜிக்களின் தொகுப்பையும் வாட்ஸ்அப் அறிமுகம் செய்துள்ளது.
- நம்பகமான மற்றும் பிரபலமான வாட்ஸ்அப் கசிவு தலமான, WABetaInfo மூலம் இந்த தகவல் வெளியாகியுள்ளது.
- வாட்ஸ்அப் வெப் (பதிப்பு 2.2130.7) இல் உள்ள புதிய பட எடிட்டிங் கருவிகள் ‘Drawing tools’ என அழைக்கப்படும் அம்சத்தின் ஒரு பகுதியாக இருக்கும்.
- இதன் மூலம் ஒரு பயனர் ஒரு போட்டோவை ஒருவருக்கு அனுப்புவதற்கு முன்பு திருத்தவும் மாற்றவும் அனுமதிக்கிறது. இந்த அம்சம் வாட்ஸ்அப் ஸ்மார்ட்போன் பதிப்புகளில் பயன்பாட்டில் இருந்தாலும் இப்போது தான் வெப் பதிப்பிற்கு அறிமுகம் செய்யப்பட தயாராகி வருகிறது.
- வாட்ஸ்அப் வெப் பதிப்பில் சேர்க்கப்படவுள்ள Drawing Tools அம்சம் ஒரு படத்தின் மேல் எழுதவும், ஸ்டிக்கர்கள், ஈமோஜிகளைச் சேர்க்கவும் மற்றும் பகிர்வதற்கு முன் படத்தை Crop/rotate செய்ய அனுமதிக்கிறது. ஒரு குறிப்பிட்ட படத்தை நீங்கள் பகிர தேர்வு செய்த பிறகு இந்த கருவிகள் தோன்றும்.
புதிய ஈமோஜிகள்
பயன்பாட்டின் iOS மற்றும் ஆண்ட்ராய்டு பதிப்புகளில் – பதிப்பு 2.21.16.10 – வாட்ஸ்அப் சமீபத்திய iOS 14.5 புதுப்பிப்பின் ஒரு பகுதியாக இருந்த வாட்ஸ்அப்பின் சமீபத்திய பீட்டா உருவாக்கத்தில் புதிய ஈமோஜிகளைச் சேர்த்தது.
வாட்ஸ்அப் அதன் பிரபலமான மெசேஜிங் செயலியில் புதிய எமோஜிக்களைச் சேர்க்கத் தொடங்கியுள்ளது. தற்போது, வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு செயலியின் பீட்டா கட்டமைப்பில் புதிய எமோஜிகளைச் சேர்த்துள்ளது. வெற்றிகரமான பீட்டா வெளியீட்டிற்குப் பிறகு, பேஸ்புக்கிற்குச் சொந்தமான மெசேஜிங் நிறுவனம், பொது பயன்பாட்டிற்கு எமோஜிகளை அறிமுகம் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
WAbetaInfo அறிக்கையின்படி, வாட்ஸ்அப் புதிய எமோஜிகளை ஆண்ட்ராய்டுக்கான சமீபத்திய வாட்ஸ்அப் பீட்டா பதிப்பில் சேர்த்துள்ளது, இது 2.21.16.10. வாட்ஸ்அப்பின் பீட்டா திட்டத்தின் ஒரு பகுதியாக இருக்கும் வாட்ஸ்அப் பயனர்கள் இப்போது புதிய எமோஜி பேக்கை பயன்படுத்த முடியும்.
இருப்பினும், சமீபத்திய பீட்டா கட்டமைப்பைப் பயன்படுத்தாத பயனர்களுக்கு புதிய எமோஜிகளை உடனடியாக அனுப்பினால் பெறுபவர்கள் அவற்றைப் பார்க்க முடியாது. வாட்ஸ்அப்பின் ஆண்ட்ராய்டு பீட்டா பதிப்பைத் தவிர, ஆப்பிள் சமீபத்தில் iOS 14.5 புதுப்பிப்புடனும் வாட்ஸ்அப் சமீபத்திய எமோஜி பேக்கை அறிமுகப்படுத்தியுள்ளது.
புதிய எமோஜி ஆதரவைத் தவிர, மெசேஜிங் தளத்தை முன்பை விட உற்சாகமாகவும் எளிமையாகவும் மாற்ற நிறைய புதிய அம்சங்களில் வாட்ஸ்அப் செயல்பட்டு வருகிறது. உதாரணமாக, சமீபத்தில் வாட்ஸ்அப்பில் ‘View Once’ எனும் ஒரு முறை மெசேஜை பார்த்ததும் தானாக டெலிட் ஆகும் அம்சம் அறிமுகம் செய்யப்பட்டது.
தனியே, வாட்ஸ்அப் பல சாதன ஆதரவையும் வழங்க செயல்பட்டு வருகிறது, இது பயனர்களை பல சாதனங்களில் வாட்ஸ்அப் பயன்பாட்டை இயக்க அனுமதிக்கும்.
அதுமட்டுமல்லாமல் Encrypted backups அம்சத்தையும் கொண்டுவர வாட்ஸ்அப் தீவிரமாக செயல்பட்டு வருகிறது, இது cloud இல் இருக்கும்போதும் கூட உங்கள் எல்லா உரையாடல்களும் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்யும் ஒரு புதிய அம்சம் ஆகும். தற்போதுவரை, நம் வாட்ஸ்அப் மெசேஜ்கள் செயலியில் மட்டுமே end-to-end encrypt செய்யப்பட்ட பாதுகாப்பை வழங்குகின்றன. Cloud இல் இருக்கும் backups encrypt செய்யப்படாமல் பாதுகாப்பின்றியே இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
0
0