நீங்க GB வாட்ஸ்அப் யூஸ் பண்றீங்களா? அப்போ உங்க வாட்ஸ்அப்புக்கு ஆப்பு தான்!

7 July 2021, 5:12 pm
WhatsApp threatens to block users of clone app, ‘GB WhatsApp’
Quick Share
  • வாட்ஸ்அப் போன்றே பல குளோன் செய்யப்பட்ட செயலிகள் இணையத்தில் கிடைக்கின்றன. வாட்ஸ்அப் போன்ற டிசைனில், வாட்ஸ்அப்பில் கிடைக்காத பல அம்சங்களும் அவற்றில் கிடைக்கின்றன.
  • அதற்கு எடுத்துக்காட்டாக GB வாட்ஸ்அப், வாட்ஸ்அப் பிளஸ் போன்றவற்றை சொல்லலாம்.
  • இந்த குளோன் பயன்பாடுகள் பிளே ஸ்டோரில் கிடைக்காது. 
  • ஆனால் பல்வேறு ஆப் தளங்களில் இருந்து இதை டவுன்லோடு செய்து கொள்ள முடியும். 
  • வாட்ஸ்அப் போன்றே இருக்கும் Whatsapp plus/ GB whatsapp போன்ற மூன்றாம் தரப்பு மெசேஜிங் பயன்பாடுகளைப் பயன்படுத்தும் பயனர்களின் கணக்குகள் தடை செய்யப்படும் என வாட்ஸ்அப் எச்சரிக்கை விடுத்துள்ளது. 
  • பயனர்கள் வாட்ஸ்அப் செயலிக்கு மாறாமல் குளோன் பயன்பாடுகளைத் தொடர்ந்துப் பயன்படுத்துவது தெரிந்தால் அவர்களின் கணக்கு நிரந்தரமாக தடைச் செய்யப்படும் என தகவல். 
  • மூன்றாம் தரப்பு செயலிகளில் பாதுகாப்பு இல்லை என்பதாலும், பல பயனர்கள் குளோன் ஆப்களைப் பயன்படுத்துவதாலும் வாட்ஸ்அப் தரப்பில் இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
  • எனவே, பயனர்கள் GB வாட்ஸ்அப் பயன்படுத்தினாலும், அதை Uninstall செய்துவிட்டு உடனடியாக அதிகாரப்பூர்வமாக பிளே ஸ்டோரில் கிடைக்கும் வாட்ஸ்அப் அல்லது வாட்ஸ்அப் பிசினஸ் பயன்பாடுகளை பயன்படுத்த பரிந்துரைக்கப்படுகிறது.

Views: - 113

0

0