பயனர்களுக்கு ஹேப்பி நியூஸ் கொடுத்தது வாட்ஸ்அப்! | Whatsapp Privacy Policy “On Hold”

10 July 2021, 11:27 am
Whatsapp Will not compel users to accept privacy policy
Quick Share

கடந்த சில மாதங்களாக சுமார் 53 கோடி பயனர்களைக் கொண்ட வாட்ஸ்அப் சில தனியுரிமைக் கொள்கைகளை அமலுக்குக் கொண்டு வருவதாக தெரிவித்ததை அடுத்து பல சிக்கல்களை எதிர்கொண்டது. 

அதாவது புதிய தனியுரிமைக் கொள்கைகளின் படி, வாட்ஸ்அப் உங்கள் தொடர்புகள், கட்டண விவரங்கள் உட்பட சில தகவல்களை பேஸ்புக் உடன் பகிர்ந்துக்கொள்ளும் என்றும் வேறு சில விதிமுறைகள் குறித்தும் தெரிவித்திருந்தது. முதலில் இந்த சட்டம் பிப்ரவரி 8 முதல் அமலுக்கு வரும் என்றும் இதனை ஏற்க மறுப்பவர்கள் வாட்ஸ்அப் சேவையைப் பயன்படுத்த முடியாது என்றும் தெரிவித்து இருந்தது.

இதையடுத்து பயனர்கள் சரசரவென டெலிகிராம், சிக்னல் போன்ற செயலிகளுக்கு மாறவே இதற்கான காலக்கெடுவை  மே மாதம் 15 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து மக்களுக்கு தனியுரிமைக் கொள்கைகள் குறித்து விளக்கம் அளித்தது. 

அதே சமயம், இந்திய அரசாங்கம் புதிய தனியுரிமைக் கொள்கைகளுக்கு எதிராக வழக்குத் தொடர்ந்ததை அடுத்து மே 15 க்கு பிறகும் வாட்ஸ்அப் சேவை கிடைக்கும். ஆனால் தனியுரிமைக் கொள்கைகளைப் பயன்படுத்தாத சிலருக்கு சில அம்சங்கள் வாட்ஸ்அப்பில் கிடைக்காமல் போகும் என தெரிவித்தது.

இறுதியில், இந்த வழக்கு மீண்டும் நேற்று (09-ஜூலை) உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, நாடாளுமன்றத்தில் தரவுப் பாதுகாப்பு மசோதா சட்டமாக ஒப்புதல் பெற்று நடைமுறைக்கு வரும் வரை புதிய தனியுரிமைக் கொள்கை நிறுத்திவைக்கப்படுகிறது, இதை ஏற்றுக்கொள்ள பயனர்களை வலியுறுத்தமாட்டோம் என வாட்ஸ்அப் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும் இந்த வழக்கு ஜூலை 30 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. 

இந்த தகவல் 53 கோடி வாட்ஸ்அப் பயனர்களுக்கு மிகவும் ஒரு  மகிழ்ச்சியான செய்தியாக வந்துள்ளது.

Views: - 154

0

0