நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய விண்டோஸ் 10 கீபோர்டு ஷார்ட்கட்ஸ்

23 November 2020, 10:19 am
Windows 10 Keyboard Shortcut Keys You Need to Know
Quick Share

கீபோர்டு என்பது கணினிகளில் மிகவும் முக்கியமான பாகம் என்பது மறுப்பதற்கில்லை. சில பணிகளுக்காக நாம் கீபோர்டை அதிகம் பயன்படுத்த வேண்டுமெனில், கீபோர்டு ஷார்ட்கட்ஸ் கீகளை அறிந்து வைத்துக்கொள்வது நேரத்தைச் சேமிப்பதற்கும், விஷயங்களை எளிதாக்குவதற்கும் முக்கியமான ஒன்றாக இருக்கும்.

கணினியின் கீபோர்டு ஷார்ட்கட்ஸ்கள்

ஒவ்வொரு கீபோர்டிலும் இருக்கும் அடிப்படை – F கீகளைப் பற்றி  முதலில் தெரிந்துக்கொள்ளலாம்.

 • F1 – உதவி
 • F2 – ஒரு குறிப்பிட்ட ஃபைல் அல்லது ஃபோல்டருக்கு மறுபெயரிட
 • F3 – அனைத்து ஃபைல்களையும் கண்டுபிடிக்க
 • F4- டிராப்-டவுன் பட்டியலைத் திறக்க
 • F5- தற்போதைய விண்டோவை புதுப்பிக்க (நீங்கள் Right கிளிக் செய்வதைத் தவிர்த்து, F5 ஐக் கிளிக் செய்யலாம்)
 • F10- மெனு பார் விருப்பங்களை செயல்படுத்துகிறது

Function Keys களைத் தவிர, CTRL மற்றும் ALT Key களில் உள்ள கீபோர்டு ஷார்ட்கட்களும் மிகவும் பயனுள்ளவை. எந்தவொரு ஆவணத்திலும் நீங்கள் பணிபுரியும் போது CTRL அல்லது Control Key மிகவும் பயனுள்ளது, ஏனெனில் இது பல எளிய பணிகளுக்கு உதவுகிறது. சில ஷார்ட்கட்ஸ் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன:

 • CTRL + A முழு ஆவணம் / கோப்புறையைத் தேர்ந்தெடுக்க
 • CTRL + C தேர்ந்தெடுக்கப்பட்டவற்றை Copy செய்ய
 • CTRL + X தேர்ந்தெடுக்கப்பட்டவற்றை cut செய்ய
 • CTRL + V Copy செய்தவற்றை Paste செய்ய
 • CTRL + Z கடைசி செயல்பாட்டை Undo செய்ய
 • CTRL + B எழுத்துருவை போல்ட் ஆக மாற்ற
 • CTRL + U தேர்ந்தெடுக்கப்பட்டவற்றை அடிக்கோடிட்டுக் காட்ட
 • CTRL + I எழுத்துருவை Italics ஆக மாற்ற
 • ALT + TAB ஓபன் செய்திருக்கும் விண்டோகளுக்கு இடையில் மாற
 • ALT + F4 ஒரு செயலை விட்டு வெளியேற மற்றும் தற்போதைய விண்டோவை Close செய்ய
 • ALT + Enter – Properties டயலாக் பாக்ஸைத் திறக்கும்
 • ALT + Space – தற்போதைய விண்டோவுக்கான System Menu வை திறக்க

Views: - 25

0

0