விண்ணிற்கு பறந்தது ரீ-புரோகிராம் செய்யக்கூடிய உலகின் முதல் வணிக செயற்கைக்கோள்! | Eutelsat Quantum | விவரங்கள் இங்கே

Author: Dhivagar
31 July 2021, 5:13 pm
World's first commercial re-programmable satellite Eutelsat Quantum blasts into space
Quick Share

ரீ-புரோகிராம் செய்யக்கூடிய உலகின் முதல் வணிக செயற்கைக்கோள் வெள்ளிக்கிழமை (31-ஜூலை-21) அன்று பிரெஞ்சு கயானாவில் நகரில் இருந்து Ariane 5 ராக்கெட்டில் விண்ணில் ஏவப்பட்டது. இது மிகவும் நெகிழ்வான தகவல்தொடர்புகளுக்கான புதிய சகாப்தத்தை துவங்கிவைத்துள்ளது. 

இதுநாள் வரையில் பூமியில் வடிவமைக்கப்பட்டு வழக்கமான சுற்றுப்பாதையில் செலுத்திய பிறகு மீண்டும் புரோகிராம் செய்ய முடியாத வழக்கமான மாதிரிகள் போலல்லாமல், யூடெல்சாட் குவாண்டம் (Eutelsat Quantum) பயனர்களை அவர்களின் தேவைகளுக்கு ஏற்ப தகவல்தொடர்புகளை நிகழ்நேரத்தில் மாற்றி புரோகிராம் செய்ய அனுமதிக்கிறது. இந்த செயற்கைகோள் விண்ணில் ஏவப்பட்ட 36 நிமிடங்களுக்குப் பிறகு சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டது.

பூமிக்கு மேலே சுமார் 35,000 கிலோமீட்டர் (22,000 மைல்கள்) உயர்த்தில் நிலை நிறுத்தப்பட்ட பிறகு அதை ரீபுரோகிராம் செய்ய முடியும் என்பதால், Eutelsat Quantum செயற்கைக்கோள் அதன் 15 வருட வாழ்நாளில் தரவு பரிமாற்றம் மற்றும் பாதுகாப்பான தகவல்தொடர்பு மாற்றும் கோரிக்கைகளுக்கு பதிலளிக்க முடியும் என்று ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் தெரிவித்துள்ளது. 

3.5 டன் எதைக்கொண்டு குவாண்டம் மாடல் எட்டு தகவல்தொடர்பு கற்றைகளைக் கொண்டுள்ளது, ஒவ்வொன்றும் அதன் கவரேஜ் பரப்பையும், வெளியிடும் தொலைத்தொடர்பு சமிக்ஞையின் சக்தியையும் மாற்றியமைக்கும் திறன் கொண்டது.

Views: - 177

0

0