சூப்பர் ஹீரோக்களுக்கு சியோமி மரியாதை! நீரஜ் சோப்ரா உட்பட எல்லோருக்குமே Mi 11 Ultra 5g!
Author: Hemalatha Ramkumar9 August 2021, 4:05 pm
ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கம் வென்ற அனைத்து இந்திய விளையாட்டு வீரர்களுக்கும் அவர்களின் சாதனையைப் பாராட்டும் விதமாக Mi 11 Ultra 5g ஸ்மார்ட்போனை பரிசளிப்பதாக சியோமி இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது.
Mi 11 Ultra 5g போனின் ஹை-எண்ட் மாடலின் விலை ரூ.69,999 என்பது குறிப்பிடத்தக்கது.
Mi 11 அல்ட்ரா செராமிக் பிளாக் மற்றும் செராமிக் ஒயிட் ஆகிய இரண்டு வண்ண விருப்பங்களில் கிடைக்கிறது. Mi அல்ட்ரா ரூ.69,999 விலையிலானது, இது விரைவில் mi.com மற்றும் அமேசான் இந்தியா வழியாக வாங்க கிடைக்கும்.
Mi 11 அல்ட்ரா இரண்டு டிஸ்பிளேக்களைக் கொண்டுள்ளது. இது 1.1 அங்குல AMOLED always-on திரை உடன் வருகிறது. இதிலிருக்கும் இரண்டாவது திரை பின்புற கேமராவிற்கான Viewfinder ஆக செயல்படுகிறது, மேலும் இது அழைப்பு அறிவிப்புகள், நேரம், பேட்டரி லெவல் மற்றும் பலவற்றையும் காண்பிக்கிறது. முன்பக்கத்தில், ஸ்மார்ட்போனில் 6.81 இன்ச் WQHD + சாம்சங் E4 AMOLED டிஸ்ப்ளே 120 Hz புதுப்பிப்பு வீதம், கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் ஆகியவற்றை கொண்டுள்ளது.
ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 888 செயலி உடன் இயக்கப்படுகிறது. இது 67W ஃபாஸ்ட் சார்ஜிங், 67W வயர்லெஸ் சார்ஜிங் மற்றும் 10W ரிவர்ஸ் சார்ஜிங் ஆகியவற்றுக்கான ஆதரவுடன் 5,000 mAh பேட்டரியைக் கொண்டுள்ளது.
Mi 11 அல்ட்ரா 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி ஸ்டோரேஜ் உடன் வருகிறது. இதில் 8 ஜிபி + 256 ஜிபி மற்றும் 16 ஜிபி + 256 ஜிபி ஆகிய இரண்டு சேமிப்பு வகைகளும் இருக்கும், ஆனால் சியோமி இந்தியாவில் இதை அறிமுகப்படுத்தவில்லை.
கேமராக்களைப் பொறுத்தவரை, இந்த ஸ்மார்ட்போனில் 50 மெகாபிக்சல் முதன்மை சென்சார், 48 மெகாபிக்சல் 128 டிகிரி அல்ட்ரா-வைட் கேமரா மற்றும் 120x ஜூம் கொண்ட 48 மெகாபிக்சல் பெரிஸ்கோப் லென்ஸ் ஆகியவை உள்ளது.
கூடுதலாக, Mi 11 அல்ட்ராவில் 10x ஹைப்ரிட் ஜூம் வசதி உள்ளது. சில கூடுதல் கேமரா அம்சங்களில் 8K ரெசல்யூஷன் வீடியோ ரெக்கார்டிங், dToF 64 பாயிண்ட் லேசர் ஆட்டோஃபோகஸ், 4-அச்சு OIS மற்றும் 1920 fps ஸ்லோ மோஷன் வீடியோ ரெக்கார்டிங் ஆகியவை அடங்கும்.
ஸ்மார்ட்போன் தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்கான IP68 மதிப்பீட்டையும் கொண்டுள்ளது. இது ஹர்மன் கார்டன் உடன் இயங்கும் இரட்டை ஸ்பீக்கர்களையும் கொண்டுள்ளது.
0
0