மகாபிரபு இங்கேயுமா! வாகன துறையிலும் கால் பதிக்க தயாராகிறது சியோமி!

22 February 2021, 3:40 pm
Xiaomi is reportedly planning on launching a new car as the smartphone industry faces stagnation
Quick Share

இதுவரை குறைந்த விலையில் சிறந்த ஸ்மார்ட்போன்களையும், அதற்கான துணை உபகரணங்கள் பிரிவில் மட்டுமே கவனம் செலுத்தி வந்த சியோமி இப்போது வேறொரு முடிவிலும் இருப்பதாக தெரியவந்துள்ளது. சியோமி நிறுவனம் தனது சொந்த காரை உருவாக்க திட்டமிட்டுள்ளதாகவும், இது ஒரு மூலோபாயத்துடன் உருவாக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்த புதிய திடத்திற்கு சியோமியின் தற்போதைய தலைமை நிர்வாக அதிகாரி லீ ஜுன் நேரடியாக தலைமை தாங்குவார். 2013 ஆம் ஆண்டில் டெஸ்லா தலைமை நிர்வாக அதிகாரி எலோன் மஸ்கை சந்திக்க ஜூன் இரண்டு முறை அமெரிக்காவிற்கு விஜயம் செய்திருந்தார், இப்போது இந்த துறையில் நிறுவனத்தின் ஆர்வம் அதிகரித்ததாக தெரிகிறது.

சியோமி மற்ற பிரிவுகளில் இறங்குவதற்கு ஒரு முக்கிய காரணம் ஸ்மார்ட்போன் சந்தை எதிர்கொள்ளும் தேக்க நிலை என்றும் அறிக்கை கூறுகிறது. சீன ஸ்மார்ட்போன் தயாரிப்பாளர் விரைவில் கார்களையும் உற்பத்தி செய்வதற்கான காரணமும் இதுதான் என்றும் கூறப்படுகிறது.

சியோமி நிறுவனம் இந்த செய்தி குறித்து இதுவரை அதிகாரப்பூர்வமாக எதுவும் கருத்துத் தெரிவிக்கவில்லை, இது தொடர்பான எந்தவொரு புதுப்பித்தலையும் இதுவரை வெளியிடவில்லை.

Views: - 13

0

0

Leave a Reply