சியோமியின் Mi 67W சோனிக்சார்ஜ் 3.0 சார்ஜர் அறிமுகம் | விலை & விவரங்கள் இங்கே

12 July 2021, 6:08 pm
Xiaomi launches Mi 67W SonicCharge 3.0 charger
Quick Share

சியோமி தனது Mi 67W சோனிக்சார்ஜ் 3.0 சார்ஜரை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. சியோமி அறிமுகம் செய்துள்ள புதிய சார்ஜர் யூ.எஸ்.பி டைப்-A முதல் யூ.எஸ்.பி டைப்-C வரையிலான கேபிள் உடன் வரும். சார்ஜரில் ஒரு யூ.எஸ்.பி டைப்-A போர்ட் உள்ளது. 

இதன் மூலம் ஸ்மார்ட்போன்கள், மடிக்கணினிகள், ஹெட்ஃபோன்கள் மற்றும் பல சாதனங்களை சார்ஜ் செய்ய முடியும் என்று சியோமி தெரிவித்துள்ளது. பெயர் குறிப்பிடுவது போல, சார்ஜர் பல சாதனங்களை வேகமாக சார்ஜ் செய்ய 67W வெளியீட்டைக் கொண்டுள்ளது. சியோமி இந்த ஆண்டின் தொடக்கத்தில் 67W ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் Mi 11 அல்ட்ராவை அறிமுகப்படுத்தியது. இருப்பினும், இந்தியாவில் 55W ஃபாஸ்ட் சார்ஜருடன் மட்டுமே வழங்கப்படுகிறது.

Mi 67W சோனிக்சார்ஜ் 3.0 சார்ஜர்: விலை

இந்தியாவில் Mi 67 W சோனிக் சார்ஜ் 3.0 சார்ஜரின் விலை ரூ.1,999 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சார்ஜர் விலை மிகவும் அதிகமாகவே நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது நிறுவனத்தின் வலைத்தளம், Mi ஹோம் ஸ்டோர்ஸ் மற்றும் நாடு முழுவதும் உள்ள பிற கடைகளில் கிடைக்கும். சார்ஜர் 100 செ.மீ 6A டைப் C கேபிளுடன் வரும்.

Mi 67W சோனிக்சார்ஜ் 3.0 சார்ஜர் குறிப்பாக Mi 11 அல்ட்ரா பயனர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும், ஏனெனில் இந்த வேகமான சார்ஜ் தொழில்நுட்பத்தை ஆதரிக்கும் இந்தியாவின் ஒரே சியோமி ஸ்மார்ட்போன் அதுதான். சார்ஜர் இந்தியாவில் வெள்ளை வண்ண மாறுபாட்டில் மட்டுமே விற்கப்படும். இது இப்போது சியோமியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பட்டியலிடப்பட்டுள்ளது.

Mi 67W சோனிக்சார்ஜ் 3.0 சார்ஜர் அம்சங்கள்

பெயர் குறிப்பிடுவது போல, Mi 67W சோனிக்சார்ஜ் 3.0 சார்ஜர் 67W வேகமான சார்ஜிங்கை ஆதரிக்கிறது. இது ஸ்மார்ட்போன்கள், ஹெட்ஃபோன்கள் மற்றும் மடிக்கணினிகள் உள்ளிட்ட பெரும்பாலான கேஜெட்களுடன் இணக்கமானது. குயிக் சார்ஜ் 3.0 தொழில்நுட்பத்தை வழங்க சார்ஜர் குவால்காம் சான்றிதழ் பெற்றுள்ளது. இது அனைத்து தரம், பாதுகாப்பு மற்றும் நம்பகத்தன்மை தரங்களை பூர்த்தி செய்ய உள்ளமைக்கப்பட்ட Surge Protection அமைப்பைக் கொண்டுள்ளது.

சார்ஜர் 100-120V இன் உள்ளீட்டை எடுத்து 67W வெளியீட்டை வழங்குகிறது. கடைசியாக, BIS சான்றளிக்கப்பட்ட சார்ஜர் ஒரு பாலிகார்பனேட் உடலமைப்பைக் கொண்டுள்ளது.

Views: - 133

0

0