சியோமி Mi 11 லைட் பற்றிய முக்கியமான விவரங்கள் கசிந்தது! விவரங்கள் உங்களுக்காக இதோ

1 February 2021, 6:03 pm
Xiaomi Mi 11 Lite tipped to come with Snapdragon 755G chipset, 64 MP camera, Mi 11 Pro to sport 5,000 mAh battery
Quick Share

சியோமி கடந்த ஆண்டு டிசம்பரில் Mi 11 முதன்மை ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியது. இப்போது இந்நிறுவனம் விரைவில் Mi 11 லைட் மற்றும் Mi 11 ப்ரோவையும் அறிமுகப்படுத்தவுள்ளது. இரண்டு ஸ்மார்ட்போன்களுக்கான சில முக்கிய விவரங்கள் இப்போது ஆன்லைனில் கசிந்துள்ளது.

கசிந்த தகவல்களின்படி, Mi 11 லைட் செல்பி கேமராவுக்கு பஞ்ச் ஹோல் கொண்ட OLED திரையுடன் வரும். இது குவால்காம் SM 7350 சிப்செட் (ஸ்னாப்டிராகன் 755G) உடன் இயக்கப்படும். கேமராவைப் பொறுத்தவரை, 5x ஜூமை ஆதரிக்கும் 64 மெகாபிக்சல் முதன்மை சென்சார் இருக்கும்.

Mi 11 ப்ரோவைப் பொறுத்தவரை, பேட்டரி திறன் 5,000 mAH ஆக இருக்கலாம் என்பதை வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

Mi 11 லைட் 6 ஜிபி + 64 ஜிபி, 6 ஜிபி + 128 ஜிபி, மற்றும் 8 ஜிபி + 128 ஜிபி ஸ்டோரேஜ் மாடல்களில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, மேலும் அவை பிங்க், பிளாக் மற்றும் ப்ளூ கலர் தேர்வுகளில் வழங்கப்படக்கூடும். மேலும் இந்த மாடல் 120 Hz IPS LCD டிஸ்ப்ளேவையும் கொண்டிருக்கக்கூடும்.

இந்த சாதனம் ஸ்னாப்டிராகன் 732G ஆல் இயக்கப்படும், இதனால் இது 5G இணைப்பை ஆதரிக்காது. சாதனத்தில் 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி சேமிப்பு இருக்கக்கூடும்.

கேமராக்களைப் பொறுத்தவரை, Mi 11 லைட் 64MP முதன்மை சென்சார், 8MP அல்ட்ரா-வைட்-ஆங்கிள் லென்ஸ் மற்றும் 5MP மேக்ரோ லென்ஸ் உள்ளிட்ட மூன்று கேமரா அமைப்பைக் கொண்டு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. செல்ஃபிக்களுக்கு, 16 MP கேமரா இருக்கும்.

Views: - 0

0

0