சியோமி Mi பேண்ட் 6 வெளியாகும் தேதி கன்ஃபார்ம்! என்னென்ன அம்சங்கள் எல்லாம் இருக்கப்போகுது?

27 March 2021, 1:09 pm
Xiaomi Mi Band 6 To Be Unveiled On March 29
Quick Share

ஃபிட்னெஸ் டிராக்கர்கள் பிரிவில் சியோமியின் Mi பேண்ட் வரிசை அறிமுகமானதிலிருந்து வெற்றிகரமான ஒன்றாக இருந்து வருகிறது. கடந்த ஆண்டு, நிறுவனம் ஜூன் மாதத்தில் சீனாவுக்கான Mi பேண்ட் 5 ஐ அறிமுகம் செய்தது. இந்த ஃபிட்னஸ் பேண்ட் அறிமுகமாகி ஒரு வருடத்திற்கும் குறைவான காலத்திலேயே, சியோமி இப்போது Mi பேண்ட் 6 ஐ அறிமுகம் செய்ய தயாராக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

சியோமி Mi பேண்ட் 6: வெளியீட்டு தேதி

இந்த Mi பேண்ட் 6 ஃபிட்னெஸ் பேண்டுக்காக நாம் நிறைய நாட்கள் காத்திருக்க வேண்டியதில்லை. இந்த ​​ஃபிட்னஸ் பேண்ட் மார்ச் 29 ஆம் தேதி வெளியாகும் என்று நிறுவனம் உறுதிப்படுத்தி உள்ளது. குறிப்பிடத்தக்க வகையில், அடுத்த தலைமுறை முதன்மை மாடல்களான Mi 11 புரோ, Mi 11 ப்ரோ அல்ட்ரா மற்றும் புதிய Mi மிக்ஸ் ஸ்மார்ட்போன் வெளியாகும்போது இதுவும் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இது அடுத்த தலைமுறை ஃபிட்னஸ் பேன்ட் என்பதால், Mi பேண்ட் 6 புதிய மற்றும் மேம்பட்ட அம்சங்கள் மற்றும் மேம்பாடுகளுடன் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், வடிவமைப்பு மிகவும் மாறவில்லை என்பதை டீஸர் சுட்டிக்காட்டுகிறது.

Mi பேண்ட் 6: என்ன எதிர்பார்க்கலாம்?

SpO 2 கண்காணிப்புடன் இரத்த ஆக்ஸிஜன் அளவைக் கண்டறிவதற்கான ஆதரவுடன் சியோமி Mi பேண்ட் 6 வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டு வெளியான Mi பேண்ட் 5 இல் இந்த இந்த அம்சம் தொகுக்கப்படவில்லை. இது தவிர, Mi பேண்ட் 6 ஒரு பெரிய டிஸ்பிளே மற்றும் 30 ஸ்போர்ட்ஸ் மோட்கள் உடன் வரும் என்று கூறப்படுகிறது. இது ஸ்டாண்டர்ட் மற்றும் NFC ஆகிய இரு வகைகளில் அறிமுகப்படுத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Views: - 13

0

0