“சவுண்டு மூலம் சார்ஜ்” செய்யும் புது வசதி! அசத்தும் புது தயாரிப்பில் களமிறங்கிய சியோமி

22 June 2021, 9:07 am
Xiaomi working on new technology to charge phone through sound
Quick Share

ஸ்மார்ட்போன்கள் மற்றும் பிற மின் சாதனங்களை ஒலி வழியாக சார்ஜ் செய்யும் தொழில்நுட்பத்தை உருவாக்கும் பணியில் சியோமி செயல்பட்டு வருகிறது.

சீனா தேசிய அறிவுசார் சொத்து நிர்வாகத்தில் [China National Intellectual Property Administration (CNIPA)] தாக்கல் செய்யப்பட்ட காப்புரிமையின்படி, இந்த அமைப்பு ஆற்றலை சேமிப்பதற்கான வழிமுறைகளையும், ஒலி மூலம் ஸ்மார்ட்போன்களை சார்ஜ் செய்ய பயன்படுத்தப்படும் சவுண்ட் சார்ஜரையும் பயன்படுத்துகிறது என்று கூறுகிறது. இதில் பயன்படுத்தபடும் தொழில்நுட்பம் ஒலி அலைகளிலிருந்து அதிர்வுகளை மாற்று மின்னோட்டமாக (Alternating Current) மாற்றுகிறது, பின்னர் இது ஸ்மார்ட்போன்களை சார்ஜ் செய்வதற்காக டைரக்ட் கரண்ட் (Direct Current DC) சக்தியாக மாற்றப்படுகிறது.

தொலைபேசிகளை சார்ஜ் செய்வதற்கான ஒரு தனித்துவமான வழிமுறையை நிறுவனம் அறிமுகப்படுத்துவதில் சியோமி தனித்து செயல்படுகிறது. ஏனென்றால் கடந்த ஜனவரி மாதத்தில், நிறுவனம் Aircharge எனும் காற்று மூலம் சார்ஜ் செய்யும் தொழில்நுட்பத்தை வெளியிட்டது, இதன் மூலம் ஒருவர் தங்கள் தொலைபேசிகளை தொலைவிலிருந்தும் கூட எளிதில் சார்ஜ் செய்ய முடியும்.

“இடப்பொருத்தம் மற்றும் ஆற்றல் பரிமாற்றத்தில் தான் சியோமி ரிமோட் சார்ஜிங்கின் முக்கிய தொழில்நுட்பம் இருக்கிறது. சியோமி உருவாக்கிய தனிமைப்படுத்தப்பட்ட சார்ஜிங் அமைப்பில் ஐந்து கட்ட குறுக்கீடு (phase interference) ஆண்டெனாக்கள் உள்ளமைக்கப்பட்டுள்ளன, இது ஸ்மார்ட்போனின் இருப்பிடத்தை துல்லியமாக கண்டறிய முடியும். 144 ஆண்டெனாக்களைக் கொண்ட ஒரு கட்டக் கட்டுப்பாட்டு (phase control) வரிசையானது மில்லிமீட்டர் அகல அலைகளை நேரடியாக தொலைபேசியில் பீம்ஃபார்மிங் மூலம் கடத்துகிறது” என்று நிறுவனம் அப்போது கூறியது.

சியோமி கடந்த மாதம் ஹைப்பர் சார்ஜ் (Hypercharge) என்ற மற்றொரு தொழில்நுட்பத்தையும் வெளியிட்டது, இது வயர்டு தொழில்நுட்பம் மூலம் 200 வாட்ஸ் வரையிலும் அதே நேரத்தில் 120 வாட்ஸ் வரை வயர்லெஸ் சார்ஜிங் முறையிலும் ஸ்மார்ட்போன்களை சார்ஜ் செய்யும் திறன் கொண்டது. 120 W வயர்லெஸ் ஹைப்பர் சார்ஜிங் தொழில்நுட்பம் 15 நிமிடங்களுக்குள் 4,000 mAh பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்ய முடியும். அதே போல 200 W வயர்ட்டு ஹைப்பர்சார்ஜ்  தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி 8 நிமிடங்களில் அதே 4000mAh ஸ்மார்ட்போனை முழுமையாக சார்ஜ் செய்ய முடியும்.

Views: - 144

0

0