இதுதான் சரியான நேரம்! அசத்தலான ஆஃபர்களுடன் கிடைக்கும் யமஹா ஸ்கூட்டர்கள் | முழு விவரங்கள் இங்கே

Author: Hemalatha Ramkumar
17 August 2021, 3:47 pm
Yamaha Fascino 125, Ray ZR available with special festive offers
Quick Share

யமஹா மோட்டார் இந்தியா நிறுவனம் தனது ஸ்கூட்டர்களுக்கு இந்திய சந்தையில் சிறப்பு விழா கால சலுகைகளை அறிவித்துள்ளது. 

31 ஆகஸ்ட், 2021 வரை செல்லுபடியாகும் இந்த சிறப்பு சலுகை கால விற்பனையின்போது ஸ்கூட்டர்களை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு நன்மைகள் கிடைக்கும். 

இந்த சலுகைகள் இந்தியாவில் யமஹாவின் புதிய ஸ்கூட்டர்கள் வரம்பில் செல்லுபடியாகும், இதில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட Fascino 125 Fi Hybrid, Ray ZR 125 FI, Ray ZR Street Rally 125 FI, மற்றும் Fascino 125 Fi இன் ஹைபிரிட் அல்லாத பதிப்பு ஆகியவை அடங்கும்.

ஆகஸ்ட் 2021 இல் யமஹா ஸ்கூட்டரை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு ரூ.2,999 மதிப்புள்ள பரிசுகள் கிடைக்கும். இது தவிர, அவர்களுக்கு ஒரு பம்பர் பரிசு மற்றும் ரூ.20,000 மதிப்பிலான கூடுதல் நன்மைகளும் மற்றும் பல சலுகைகளும் கிடைக்கும். நிறுவனம் மூன்று சலுகைகளை அறிவித்துள்ளது. அதன் விவரங்கள் இங்கே:

இந்தியா முழுவதும் கிடைக்கும் சலுகை 

இந்த சலுகையின் கீழ் Ray ZR 125 FI, Ray ZR Street Rally 125 FI, மற்றும் Fascino 125 Fi ஹைபிரிட் அல்லாத பதிப்பு ஆகிய ஸ்கூட்டர்களுக்கு ரூ.3,876 மதிப்பிலான இன்சூரன்ஸ் நன்மைகள் அல்லது ரூ.999 மதிப்பிலான குறைந்தபட்ச கட்டணத் தொகை போன்ற சலுகைகள் கிடைக்கும்.

அனைத்து யமஹா ஸ்கூட்டர் மாடல்களும் (தமிழ்நாடு தவிர)

  • 2,999 மதிப்புள்ள உறுதியான பரிசுகள்
  • கூப்பன் சலுகை: கூப்பன்களை உறைக்கும் போது ரூ.35,000 வரையிலான பரிசுகள் கிடைக்கும் அல்லது ரூ.1 லட்சம் வரையிலான பம்பர் பரிசு கிடைக்கும்
  • ரூ .20,000 மதிப்புலன கூடுதல் நன்மைகள் கிடைக்கும்

அனைத்து யமஹா ஸ்கூட்டர் மாடல்களும் (தமிழ்நாட்டில் மட்டும்)

  • 2,999 மதிப்புள்ள உறுதி பரிசுகள் கிடைக்கும்
  •  ரூ .20,000 மதிப்பிலான கூடுதல் நன்மைகள் கிடைக்கும்

ஜப்பானிய இரு சக்கர வாகன உற்பத்தியாளரின் இந்திய பிரிவு விரைவில் அதன் முழு அளவிலான இருசக்கர வாகனங்களுக்கான கூடுதல் சலுகைகளையும் அறிவிக்கும் வேண்டும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

Views: - 380

0

0