அட இது செம கியூட்டா இருக்கே! அசத்தும் யமஹாவின் மினியன் பைக் “Yamaha Vinoora 125”

21 June 2021, 3:57 pm
Yamaha launches Minions-inspired Vinoora 125 scooter in Vietnam
Quick Share

ஜப்பானிய வாகன தயாரிப்பு நிறுவனமான யமஹா வினூரா 125 (Yamaha Vinoora 125) ஸ்கூட்டரை வியட்நாமிய சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. 

இரு சக்கர வாகனம் ஒரு தனித்துவமான மினியன் போன்ற முன் வடிவமைப்புடன் ஒரு வேடிக்கையான வடிவமைப்பைக் கொண்டுள்ளது. முழு டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், 10 இன்ச் அலாய் வீல்கள் மற்றும் 8 HP, 125 சிசி இன்ஜின் ஆகியவை இந்த ஸ்கூட்டரின் மற்ற சில சிறப்பம்சங்கள் ஆகும்.

Yamaha launches Minions-inspired Vinoora 125 scooter in Vietnam

யமஹா வினூரா 125 மினியன் கார்டூனிடம் இருந்து ஈர்க்கப்பட்ட இரட்டை ஹெட்லேம்ப்கள், ஒரு மெட்டல் கிரில், பறவையின் அலகு வடிவ முன் கவசம், ஒற்றை துண்டு பிளாட்-டைப் சீட் மற்றும் ஒரு பில்லியன் கிராப் ரெயில் ஆகியவற்றைக் கொண்ட வித்தியாசமான வடிவமைப்பைக் கொண்டுள்ளது.

இது முழு டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல், யூ.எஸ்.பி சார்ஜிங் போர்ட், நிறுவனத்தின் ஸ்மார்ட் ஸ்டார்ட் சிஸ்டம் மற்றும் 10 அங்குல அலாய் வீல்ஸ் ஆகியவற்றை கொண்டுள்ளது. இந்த ஸ்கூட்டர் 94 கிலோகிராம் எடைக்கொண்டது.

Yamaha launches Minions-inspired Vinoora 125 scooter in Vietnam

யமஹா வினூரா 125 ஸ்கூட்டர் 125 சிசி, ஒற்றை சிலிண்டர், ஏர்-கூல்டு இன்ஜினிலிருந்து ஆற்றல் பெறுகிறது, இது 8 HP ஆற்றலையும் 9.7 Nm உச்ச திருப்பு விசையையும் உற்பத்தி செய்கிறது. ஸ்கூட்டரில் லிட்டருக்கு 57.7 கிமீ எரிபொருள் திறன் உள்ளது.

சவாரி பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, யமஹா வினூரா 125 முன்பக்கத்தில் டிஸ்க் பிரேக் மற்றும் பின்புற சக்கரத்தில் டிரம் பிரேக் உடன் பொருத்தப்பட்டுள்ளது. இருப்பினும், ABS வசதி கூடுதலாக இடம்பெறவில்லை.

இரு சக்கர வாகனத்தில் சஸ்பென்ஷன் கடமைகள் முன் பக்கத்தில் ஒரு டெலஸ்கோபிக் ஃபோர்க்ஸ் மற்றும் பின்புறத்தில் ஒற்றை ஷாக் அப்சார்பர் மூலம் கையாளப்படுகிறது.

Yamaha launches Minions-inspired Vinoora 125 scooter in Vietnam

வியட்நாமில் வினூரா 125 ஸ்கூட்டரின் விலை இன்னும் அறிவிக்கப்படவில்லை. தைவானில், இதன் ஆரம்ப விலை NTD 76,300 அதாவது இந்திய மதிப்பில் தோராயமாக ரூ.2.04 லட்சம் ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்திய மக்களுக்கு சோகமான தகவல் என்னவென்றால்  இந்த ஸ்கூட்டர் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட வாய்ப்பில்லை.

Views: - 226

0

0