யமஹா MT 15 பைக்கின் விலை பயங்கர உயர்வு | புதிய விலை விவரம் இங்கே

9 July 2021, 9:42 am
Yamaha MT 15 gets massive price increase
Quick Share

யமஹா R15 V3 பைக்கின் விலை உயர்வை அறிவித்ததை அடுத்து இப்போது, உற்பத்தி நிறுவனம் யமஹா MT 15 பைக்கின் விலையையும் இந்தியாவில் உயர்த்தியுள்ளது.

யமஹா MT 15 மெட்டாலிக் பிளாக் மற்றும் டார்க் மேட் ப்ளூ ஆகிய வண்ணங்களில் வாங்க கிடைக்கிறது. இந்த மாடல்களுக்கு முன்னதாக ரூ.1,40,900 விலை நிர்ணயம் செய்யப்பட்டிருந்த  நிலையில், இப்போது விலை உயர்வுக்குப் பிறகு இதன் விலை 1,45,900 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது; முந்தைய விலையை விட ரூ.5,000 கூடுதலாக விலை உயர்த்தப்பட்டுள்ளது. அதோடு, ஐஸ் ஃப்ளோ வெர்மிலியன் மாடல் ரூ.4,000 விலை உயர்வுப் பெற்று மேலும் இப்போது ரூ.1,45,900 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

இந்த விலை உயர்வை அடுத்து யமஹா MT 15 பைக்கின் தோற்றத்திலும் அல்லது அம்சங்களின் அடிப்படையிலும் எந்த மாற்றங்களும் இல்லை, மேலும் இது VVA தொழில்நுட்பத்துடன் 155 சிசி, ஒற்றை சிலிண்டர், திரவ-குளிரூட்டப்பட்ட இன்ஜின் உடன் இயக்கப்படுகிறது. இருப்பினும், இந்த உயர்வுக்கான காரணம் தற்போதைய மாடல்களுக்கும் வரவிருக்கும் புளூடூத் பொருத்தப்பட்ட மாடல்களுக்கும் இடையிலான இடைவெளியை நிரப்புவதாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது .

Views: - 170

0

0