Yamaha RayZR 125 Fi ஹைப்ரிட் ஸ்கூட்டரின் மான்ஸ்டர் எனர்ஜி மோட்டோ GP பதிப்பு இந்தியாவில் அறிமுகம் | விலை & விவரங்கள் இங்கே

Author: Dhivagar
8 September 2021, 1:21 pm
Yamaha RayZR 125 Fi Hybrid Monster Energy MotoGP Edition launched in India
Quick Share

யமஹா மோட்டார் நிறுவனம், இந்திய சந்தையில் மான்ஸ்டர் எனர்ஜி யமஹா மோட்டோ GP இன்ஸ்பைர்டு பதிப்பில் RayZR 125 Fi ஹைப்ரிட் ஸ்கூட்டரை அறிமுகம் செய்துள்ளது. 

இந்த ஸ்கூட்டர் இந்தியாவில் ரூ.81,330 டெல்லி எக்ஸ்-ஷோரூம் விலையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த மான்ஸ்டர் எனர்ஜி யமஹா மோட்டோGP பதிப்பு கட்டமைப்பில் யமஹா மோட்டோGP பிராண்டிங்கை உள்ளடக்கிய ஒரு சிறப்பு தீம் உடன் இருக்கும். இந்த பதிப்பு கருப்பு நிறத்தை அடிப்படையாக கொண்ட வண்ணப்பூச்சு உடனும், முன் கவசம் மற்றும் பக்கங்களிலும் நீல நிற டிசைன்களுடனும் கிடைக்கும். மான்ஸ்டர் எனர்ஜி லோகோ மற்றும் டெக்கல்ஸ் முன் கவசத்தில் இருக்கும். இருப்பினும், ஸ்டாண்டர்ட் மாடலில் இருக்கும் அம்சங்கள் அப்படியே இருக்கும், மாற்றங்களைப் பொறுத்தவரை வெறும் ஒப்பனை மேம்படுத்தல்கள் மட்டுமே.

இதன் காரணமாக, RayZR 125 Fi ஹைப்ரிட் ஸ்கூட்டரின் மான்ஸ்டர் எனர்ஜி யமஹா மோட்டோ GP பதிப்பு BS6-இணக்கமான, 125 சிசி, ஒற்றை-சிலிண்டர் இன்ஜினை ஹைப்ரிட் பவர் அசிஸ்ட் மற்றும் ஃபியூயல்-இன்ஜெக்ஷன் அமைப்பையே தொடர்ந்து பயன்படுத்துகிறது. இதன் மோட்டார் 6,500 rpm இல் அதிகபட்சமாக 8 bhp பவரையும், 5,000 rpm இல் 10.3 Nm உச்ச திருப்பு விசையையும் வழங்குகிறது.

RayZR 125 ஃபை ஹைப்ரிட் மான்ஸ்டர் எனர்ஜி மோட்டோGP எடிஷனில் உள்ள வன்பொருட்களைப் பொறுத்தவரை LED ஹெட்லைட், டெலஸ்கோபிக் ஃப்ரண்ட் ஃபோர்க்ஸ், சிங்கிள் ரியர் ஸ்பிரிங், முன்புறத்தில் டிஸ்க் பிரேக், பின்புறத்தில் டிரம் யூனிட் மற்றும் யூனிஃபைட் பிரேக் சிஸ்டம் (UBS) ஆகியவற்றை உள்ளடக்கியது. 

பாதுகாப்பு அம்சங்களைப் பொறுத்தவரை சைட் ஸ்டாண்ட் இன்ஜின் கட் ஆஃப் ஸ்விட்ச் உள்ளது. இது இந்தியாவில் உள்ள அனைத்து யமஹா இரு சக்கர வாகனங்களுக்கும் ஒரு நிலையான அம்சமாகும்.

RayZR 125 ஃபை ஹைப்ரிட் மான்ஸ்டர் எனர்ஜி மோட்டோGP பதிப்பைத் தவிர, இந்தியாவில் யமஹா மோட்டார் RayZR 125 Fi ஹைப்ரிட் மற்றும் ஸ்ட்ரீட் ரேலி 125 Fi ஹைப்ரிட் ஸ்கூட்டர் ஆகியவையும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

Views: - 216

0

0