இளைஞர்களுக்கு அதிகம் பிடித்த யமஹா பைக் மாடல்களின் விலைகள் எகிறியது!
2 April 2021, 6:32 pmயமஹா மோட்டார் இந்தியா நிறுவனம் இந்தியாவில் YZF-R15 V3.0 மற்றும் FZ16 தொடரில் உள்ள பைக் மாடல்களின் விலைகளை உயர்த்தியுள்ளது. YZF-R15 V3.0 ரூ.1,52,100 முதல் கிடைக்கிறது. மறுபுறம், புளூடூத் இயக்கப்பட்ட FZ தொடரின் விலை ரூ.1,08,200 முதல் ஆரம்பமாகிறது. புதுப்பிக்கப்பட்ட விலைகளின் பட்டியல் இதோ:
- YZF-R15 V3.0 (மெட்டாலிக் ரெட்): ரூ 1,52,100 (புதிய மாடல்)
- YZF-R15 V3.0 (தண்டர் கிரே): ரூ.1,52,100 (முன்னதாக ரூ.1,50,600)
- YZF-R15 V3.0 (ரேசிங் ப்ளூ): ரூ .1,53,200 (முன்னதாக ரூ .1,51,700)
- YZF-R15 V3.0 (டார்க் நைட்): ரூ .1,54,200 (முன்னதாக ரூ .1,52,700)
- FZS-FI புளூடூத் (மேட் ரெட் / மேட் பிளாக் / டார்க் மேட் ப்ளூ): ரூ .1,08,200 (ரூ.1,07,200)
- FZS-FI புளூடூத் (டார்க் நைட்): ரூ .1,09,700 (முன்னதாக ரூ .1,08,700)
- FZS-FI புளூடூத் (விண்டேஜ் கிரீன்): ரூ.1,11,700 (முன்னதாக ரூ. 1,10,700)
யமஹா YZF-R15 V3.0 இந்திய சந்தையில் ஒரு புதிய மெட்டாலிக் ரெட் விருப்பதில் புதிய மாடலை அறிமுகம் செய்த கையேடு இந்த விலை உயர்வையும் அறிவித்துள்ளது. மேலும் 155 சிசி மோட்டார் சைக்கிள் இப்போது மெட்டாலிக் ரெட் பெயின்ட்டில் கிடைப்பதை தவிர பெரிய அளவில் மாற்றங்கள் எதுவும் இல்லை. விலை உயர்வு இருந்த போதிலும் அம்சங்கள் மற்றும் விவரக்குறிப்புகள், மேலே பட்டியலிடப்பட்ட இரண்டு மோட்டார் சைக்கிள்களிலும் மாறாமல் அப்படியே இருக்கும்.
குறிப்பு: அனைத்து விலைகளும் எக்ஸ்ஷோரூம், டெல்லி
0
0