SBI ATM இல் இருந்து தினமும் ஒரு லட்சம்! உங்களுக்கு தெரியுமா இந்த விஷயம்?

21 January 2021, 6:06 pm
You can withdraw up to one lakh daily from SBI ATM
Quick Share

நாட்டின் மிகப்பெரிய கடன் வழங்குநரான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா (SBI) தனது வாடிக்கையாளர்களுக்கு ஏழு வகையான ஏடிஎம் (அ) டெபிட் கார்டுகளை வழங்குகிறது. கார்டு வகையைப் பொறுத்து, தினசரி பணம் திரும்பப் பெறும் வரம்பு ரூ.20,000 முதல் ரூ.1 லட்சம் வரை இருக்கும். 

கடந்த ஜூலை 1 முதல், எஸ்பிஐ தனது ஏடிஎம் வித்டிராயல் விதிகளைத் திருத்தி வருகிறது. அதிகாரப்பூர்வ வலைத்தளமான sbi.co.in இல் கிடைக்கும் தகவல்களின்படி, எஸ்பிஐ தனது வங்கியில் சேமிப்புக் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு ஒரு மாதத்திற்கு 8 முறை வரை இலவச பரிவர்த்தனைகளைச் செய்ய அனுமதிக்கிறது.

அதன் பிறகு அனைத்து பரிவர்த்தனைகளுக்கும் வாடிக்கையாளர்களிடமிருந்து வசூலிக்கப்படுகின்றன.

எஸ்பிஐ டெபிட் கார்டுக்கு பொருந்தக்கூடிய தினசரி பணமெடுக்கும் வரம்புகள் பின்வருமாறு:

எஸ்பிஐ கிளாசிக் மற்றும் மேஸ்ட்ரோ டெபிட் கார்டுகள்

ஏடிஎம் பணம் எடுக்கும் வரம்பு: 20,000

எஸ்பிஐ குளோபல் இன்டர்நேஷனல் டெபிட் கார்டு

ஏடிஎம் பணம் எடுக்கும் வரம்பு: 40,000

எஸ்பிஐ கோல்டு இன்டர்நேஷனல் டெபிட் கார்டு

ஏடிஎம் பணம் எடுக்கும் வரம்பு: 50,000

எஸ்பிஐ பிளாட்டினம் இன்டர்நேஷனல் டெபிட் கார்டு

ஏடிஎம் பணம் எடுக்கும் வரம்பு: 1,00,000

எஸ்பிஐ இன்டச் டேப் மற்றும் கோ டெபிட் கார்டு

ஏடிஎம் பணம் எடுக்கும் வரம்பு: 40,000

எஸ்பிஐ மும்பை மெட்ரோ காம்போ கார்டு

ஏடிஎம் பணம் எடுக்கும் வரம்பு: 40,000

எஸ்பிஐ மை கார்டு இன்டர்நேஷனல் டெபிட் கார்டு

ஏடிஎம் பணம் எடுக்கும் வரம்பு: 40,000

OTP விதிமுறை

எஸ்பிஐ செப்டம்பர் 18 முதல் நாடு முழுவதும் உள்ள அனைத்து ஏடிஎம்களிலும், ரூ.10,000 க்கு அதிகமான பரிவர்த்தனைகளுக்கு ஒன் டைம் பாஸ்வேர்டு (OTP) வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்காக உங்கள் வங்கி அனுப்பிய OTP ஐ உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணில் உள்ளிட வேண்டும். அவ்வாறு செய்யத் தவறினால் உங்கள் பரிவர்த்தனை ரத்து செய்யப்படும்.

Views: - 0

0

0