விரைவில் வாட்ஸ்அப் மெசேஜ்களுக்கு ரியாக்ஷன் கொடுக்கும் வசதி | இங்க தான் புதுசு… ஆனா ரொம்ப பழசு! | Whatsapp Emojis Reaction feauture
Author: Hemalatha Ramkumar25 August 2021, 3:22 pm
பேஸ்புக் நிறுவனத்துக்கு சொந்தமான வாட்ஸ்அப் அதன் செய்தி தளத்திற்கென பல்வேறு புதிய அம்சங்களை அறிமுகம் செய்ய வேலை செய்து வருகிறது.
ஆண்ட்ராய்டில் View Once, Disappearing Messages போன்ற அம்சங்களை அறிமுகம் செய்ததை அடுத்து, இப்போது, ஃபேஸ்புக்கிற்குச் சொந்தமான மெசேஜிங் நிறுவனம் ஒரு புதிய செய்தி ரியாக்ஷன் அம்சத்தை கொண்டுவர வேலை செய்து வருகிறது.
சமீபத்தில் புகழ்பெற்ற வாட்ஸ்அப் டிப்ஸ்டர் ஆன WABetaInfo ஒரு புதிய அம்சத்தை வாட்ஸ்அப்பில் இருந்து கண்டறிந்து தெரிவித்துள்ளது. அதன்படி, chat களில் உள்ள செய்திகளுக்கு ஈமோஜி ரியாக்ஷனுக்கான ஆதரவை சேர்க்க வாட்ஸ்அப் முயற்சிக்கிறது. இந்த அம்சம் அனைத்து பயனர்களுக்கு கிடைக்கும்போது, பயனர்கள் chat இல் வரும் மெசேஜ்களுக்கு ரியாக்ஷன் மூலம் பதிலளிக்க முடியும்.
அதென்ன ரியாக்ஷன் என்று குழப்பாக இருக்கிறதா? அது வேற ஒண்ணுமே இல்லங்க. பேஸ்புக், இன்ஸ்டாகிராம், ட்விட்டர் மற்றும் ஆப்பிளின் iMessage போன்ற பிற தளங்களில் ஒரு பதிவு அல்லது செய்திகளுக்கு நாம் லைக் ஆப்ஷனை லாங்-பிரெஸ் செய்யும்போது, லைக் லவ், சிரிப்பு, ஆச்சரியம், சோகம் மற்றும் கோபம் போன்ற ரியாக்ஷன்களைக் காட்டும் அல்லவா, அது தான் ரியாக்ஷன் என்பதாகும்.
இது இப்போது பெரும்பாலான செயலிகளில் ஒரு பொதுவான அம்சமாக இருந்து வருகிறது. இதன் மூலம் மெசேஜ்களுக்கு டைப் செய்ய வேண்டிய தேவையின்றி வரும் மெசேஜ்களுக்கு ரியாக்ஷன்கள் மூலமே பதில் அளிக்க முடியும்.
WABetaInfo தளம் WhatsApp இன் சமீபத்திய ஆண்ட்ராய்டு பீட்டா பதிப்பில் இந்த ரியாக்ஷன் அம்சத்தைக் கண்டறிந்துள்ளது.
0
0