ஆன்ட்ராய்டு சாதனங்களில் யூடியூப் 4K வீடியோ ஆதரவு!

23 February 2021, 3:37 pm
YouTube 4K video support goes official for all Android devices
Quick Share

ஆன்லைன் வீடியோ பகிர்வு தளமான யூடியூப் ஒரு புதிய அப்டேட்டைக் கொண்டுவந்துள்ளது, இது பயனர்களுக்கு எந்த சாதனத்திலும் 4K / 60p வீடியோக்களை ஸ்ட்ரீம் செய்வதற்கான விருப்பத்தை வழங்கும். உங்கள் போனின் டிஸ்பிளே அல்ட்ரா HD இல்லை என்றாலும் கூட இந்த விருப்பம் உங்களுக்கு கிடைக்கும்.

Mashable தளத்தில் வெளியான தகவலின்படி, இந்த புதிய மாற்றம் கடந்த வாரம் பிற்பகுதியில் யூடியூப் சப்ரெடிட் பக்கத்தில் விவாதிக்கப்பட்டது, பயனர்கள் தங்கள் சாதனங்களில் 4K டிஸ்ப்ளே இல்லாவிட்டாலும் 4K வீடியோ பிளேபேக்கைத் தேர்ந்தெடுக்கும் விருப்பம் இப்போது இருப்பதாகக் குறிப்பிடப்பட்டது.

அதிக தெளிவுத்திறன் கொண்ட திரையுடன் பயனர்கள் பெறும் அதே டிஸ்பிளே தரத்தைப் பெற முடியாது என்றாலும், 4K வீடியோ விருப்பத்தைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் கூடுதல் தெளிவான வீடியோக்களைப் பார்க்க முடியும்.

ஒரு முழு HD+ தொலைபேசியில், வீடியோ தெளிவுத்திறனை அதன் அதிகபட்சத்திற்கு உயர்த்துவது, 1080p வீடியோவைப் பார்ப்பதுடன் ஒப்பிடும்போது இன்னும் சிறந்த டிஸ்பிளே அனுபவத்தை வழங்க முடியும், இருப்பினும், 4K சாதனத்தைக் கொண்டிருந்தால் மேலும் சிறந்த அனுபவத்தைப் பெற முடியும்.

இந்த புதிய அம்சம் குறிப்பாக ஆண்ட்ராய்டு பயன்பாட்டில் கிடைப்பதாகத் தெரிகிறது, இருப்பினும் அனைத்து குறைந்த தெளிவுத்திறன் கொண்ட சாதனங்களுக்கும் 4K வீடியோ பிளேபேக்கிற்கான அணுகல் உள்ளதா அல்லது அது இன்னும் முழு HD / முழு HD+ திரைகளுக்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளதா என்ற தகவல் தெளிவாக இல்லை.

இப்போதைக்கு, கூகிள் இந்த மாற்றம் குறித்து எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை, இருப்பினும் இந்த டேட்டாவை முடிக்க முடியாமல் வைத்துக்கொண்டு விழித்துக்கொண்டு இருக்கும் பல பயனர்கள் மகிழ்ச்சியாக இருப்பதாகத் தெரிகிறது. ஆனால் இந்த அம்சம் நிரந்தரமா தற்காலிகமா என்பது தெரியவில்லை.

Views: - 0

0

0

Leave a Reply