இப்போது Youtube.com தளத்துக்கும் PWA கிடைச்சாச்சு ! இனிமே ரொம்ப ஈஸி!
25 January 2021, 10:20 amகூகிள் ஏற்கனவே அதன் பல சேவைகளை முற்போக்கான வலை பயன்பாடுகள் (Progressive Web Apps or PWA) ஆக கொண்டுள்ளது. அவற்றில் கூகிள் மியூசிக் மற்றும் டிவி போன்ற பயன்பாடுகளும் அடங்கும். இருப்பினும், இப்போது நிறுவனம் தனது youtube.com வலைத்தளத்தையும் அதே அலைவரிசையில் கொண்டு வந்துள்ளது.
Youtube.com க்கான முற்போக்கான வலை பயன்பாட்டுக்கான ஆதரவு சமீபத்தில் சேர்க்கப்பட்டது. Chrome இல் உள்ள ஆம்னிபாக்சில் அட்ரஸ் பாரின் மேல் வலது மூலையில் + அடையாளத்துடன் கூடிய வட்ட ஐகானை நேரடியாக காணலாம். அதை கிளிக் செய்ய வேண்டும்.
இப்போது “install” என்று கேட்கும். Install செய்வதற்கான அனுமதியை நீங்கள் வழங்கியவுடன் கீழுள்ள டாஸ்க் பாரில் ஒரு பெரிய யூடியூப் ரெட் பட்டனுடன் ஒரு புதிய திரை திறக்கும். அது தான் youtube.com க்கான PWA.
இதை PWA வை நீங்கள் இன்ஸ்டால் செய்து, டாஸ்க் பாரில் pin செய்துக்கொண்டால், நீங்கள் address bar சென்று URL டைப் செய்ய வேண்டும் என்ற அவசியமில்லை. Youtube ஒரு தனி பயன்பாடாக செயல்படும்.
YouTube Music க்கிற்கு இந்த அம்சத்தை அறிமுகப்படுத்திய பிறகு இப்போது YouTube.com தளத்திற்கும் இந்த முற்போக்கான வலை பயன்பாடு வசதி கிடைத்திருக்கிறது என்பது குறிப்பிடத் தக்கது. யூடியூப் மியூசிக் PWA அக்டோபர் 2019 இல் கிடைத்தது, யூடியூப் TV PWA இந்த மாத தொடக்கத்தில் வெளியானது என்பது குறிப்பிடத் தக்கது.
0
0