யூடியூப் மியூசிக் இலவச பயனர்களுக்கு ஒரு ஷாக்கிங் நியூஸ்!!!

Author: Hemalatha Ramkumar
22 October 2021, 3:32 pm
Quick Share

YouTube மியூசிக் விரைவில் இலவச பயனர்களுக்கு ஆடியோ மட்டுமே தரப் போகிறது. இனி அவர்களுக்கு ஆடியோவுடன் மியூசிக் வீடியோக்களை கிடைக்காது. யூடியூப் மியூசிக் வீடியோக்கள் விரைவில் யூடியூப் பிரீமியம் அல்லது யூடியூப் மியூசிக் பிரீமியம் சந்தாதாரர்களுக்கான பிரத்தியேக தளமாக மாறும் என்று விரிவான பதிவின் மூலம் சமீபத்தில் அறிவித்தது.

இந்த இரண்டு திட்டங்கள் காரணமாக சந்தா பெறாத இலவச பயனர்கள் தேவைக்கேற்ப இசை தேர்வு மற்றும் அன்லிமிடெட் ஸ்கிப் போன்ற அம்சங்களையும் இழக்க நேரிடும்.

இருப்பினும், யூடியூப் மியூசிக்கில் இலவச பயனர்கள் Dedicated Mood mixes பகுதியை அணுகலாம். இதில் வொர்க்அவுட் மற்றும் விளம்பரங்களுடனான பயணத்திற்கான கலவைகள் அடங்கும். இலவச லிசனர்கள் பாடல்களை YouTube மியூசிக் செயலியில் அப்லோட் செய்திருந்தால், அவர்கள் எப்போது வேண்டுமானாலும், தேவைக்கேற்ப அதனை தொடர்ந்து கேட்கலாம் என்றும் கூறுகிறது.

புதிய மாற்றங்கள் இந்த ஆண்டு நவம்பர் 3 ஆம் தேதி கனடாவில் முதலில் வெளியிடப்பட உள்ளன. இதைத் தொடர்ந்து, இந்தியா உட்பட பிற பிராந்தியங்களில் மாற்றங்கள் வரும் என்று எதிர்பார்க்கலாம். மற்ற பகுதிகளுக்கான யூடியூப் மற்றும் யூடியூப் மியூசிக் நீண்டகாலத் திட்டங்கள் என்ன என்பதைப் பார்க்க வேண்டும். இது குறித்த கூடுதல் விவரங்களை நிறுவனம் விரைவில் வெளியிடும் என்று எதிர்ப்பார்க்கலாம்.

Views: - 341

0

0