ஆப்பிள் பயனர்கள் அதிகம் எதிர்பார்த்த யூடியூப் அம்சம் iOS 14 பதிப்பில் வரவிருக்கிறது! ஆனால்…?!

29 August 2020, 8:50 am
YouTube starts testing PiP mode in iOS 14, here’s what it means
Quick Share

iOS 14 அம்சங்கள் மற்றும் அப்டேட்டுகளைப் பின்தொடர்பவர்களுக்கு, OS பதிப்பு இந்த நேரத்தில் PiP (Picture-in-Picture) பயன்முறையை கொண்டு வருவது ஆச்சரியமாக இருக்கும். iOS 9 முதல் ஐபாட் பயனர்களுக்கு இந்த அம்சம் இருந்து வருகிறது, ஆனால் iOS 14 பதிப்பில் இப்போது தான்  சோதனைத் தொடங்கி உள்ளது, இது தற்போது பீட்டா பயன்முறையில் உள்ளது. 

சமீபத்திய யூடியூப் ஆப் புதுப்பித்தலுடன், கூகிளுக்குச் சொந்தமான நிறுவனம் இதைச் சோதிக்கத் தொடங்கியுள்ளது. இந்தத் தகவல் ட்விட்டரின் (9to5Mac வழியாக) வழியாக தெரியவந்துள்ளது. இந்த அம்சம் ஒரு சில வீடியோக்களுக்கு மட்டுமே செயல்படுவதாகவும் சில அறிக்கைகள் கூறுகின்றன. இந்த அம்சத்தை யூடியூப் இன்னும் செயல்படுத்தி வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நீங்கள் ஒரு iOS 14 பீட்டா பதிப்பு பயனராக இருந்தால் மற்றும் PiP பயன்முறையை இயக்கியிருந்தால், பின்னணியில் வெவ்வேறு பயன்பாடுகளில் பணிபுரியும் போது நீங்கள் ஒரு சிறிய பெட்டியில் YouTube வீடியோக்களைப் பார்க்க முடியும்.

YouTube starts testing PiP mode in iOS 14, here’s what it means

அறிக்கையின்படி, இந்த அம்சம் இப்போது YouTube பிரீமியம் நப்ரகளுக்கு மட்டும் கிடைப்பதாகத் தெரிகிறது. அதாவது இதன் பொருள் மறைமுகமாக என்னவெனில், இந்த அம்சம் வேண்டுமெனில் நீங்கள் தற்போது அதற்கு பணம் செலுத்த வேண்டியிருக்கும். இருப்பினும், இந்த ஆண்டு இறுதிக்குள் இது பிரீமியம் அல்லாத உறுப்பினர்களுக்கும் கிடைக்குமா என்பது பற்றி தகவல் எதுவும் இல்லை. இந்தியாவில், யூடியூப் பிரீமியம் ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு மாதத்திற்கு ரூ.129 விலையில் தொடங்குகிறது, ஆனால் ஆப்பிளின் ஆப் ஸ்டோர் வழியாக இது மாதத்திற்கு ரூ.169 வசூலிக்கிறது.

iOS 14 க்கு வரும் பல புதிய அம்சங்களில் PiP பயன்முறையில் ஒன்றாகும். மற்ற அம்சங்களில் விட்ஜெட்ஸ், ஸ்மார்ட் ஸ்டேக்ஸ், இயல்புநிலையாக மூன்றாம் தரப்பு பயன்பாடுகள், அம்சம் நிறைந்த ஆப்பிள் செய்திகள், சஃபாரி மற்றும் சிறந்த பாதுகாப்பு மற்றும் தனியுரிமை ஆகியவை அடங்கும்.

Views: - 28

0

0