ஒன்னுமே செய்யாம YouTube இல் 2 மில்லியன் வியூஸ் வேண்டுமா? இதை பாருங்க

1 August 2020, 6:48 pm
YouTuber posts a video of himself doing nothing for 2 hours, gets almost 2 million views
Quick Share

உலகளாவிய தொற்றுநோய் நமக்கு நிறைய தனித்துவமான பாடங்களை கற்றுக்கொடுத்துள்ளது. ஆம், சிலருக்கு கடின உழைப்பையும் மற்றும் சிலருக்கு சோம்பலையும் கற்றுக்கொடுத்துள்ளது. நம் வீட்டில் எல்லாம் நாம் சும்மா இருந்தால் அம்மாவும் அப்பாவும் திட்டிக்கொண்ட இருப்பார்கள். ஆனால் இந்தோனேசியாவைச் சேர்ந்த இந்த யூடியூபர் சும்மாவே இருந்து கிட்டத்தட்ட இரண்டு மில்லியன் வியூஸை அள்ளியுள்ளார். இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக உட்கார்ந்து மட்டுமே இருந்து எதுவும் செய்யாமல் ரெக்கார்ட் செய்து ஒரு வீடியோவைப் பகிர்ந்து கொண்டார்.

அந்த வீடியோ வைரலாகிவிட்டது. வீடியோ தலைப்பு – 2 JAM nggak ngapa-ngapain (2 hours of doing nothing) என்று கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த வீடியோ ஜூலை 10 அன்று யூடியூப்பில் பகிரப்பட்டது, அதன் பின்னர் இதுவரை கிட்டத்தட்ட 2 மில்லியன் பார்வைகளைப் பெற்றுள்ளது ( துல்லியமாக சொல்லவேண்டுமானால் இப்போதுவரை 1,962,901 பார்வைகள்).

இளைஞர்களுக்கு கல்வி கற்பிக்கும் வகையில் வீடியோ போடுமாறு பார்வையாளர்கள் கேட்டத்தைத் தொடர்ந்து அவர் அந்த வீடியோவை உருவாக்கியதாக வீடியோவின் விளக்கத்தில் டிடிட் கூறியுள்ளார். டிடிட்டின் யூடியூப் சேனல் sobat miskin official என்ற பெயருடன் 27.9K சந்தாதாரர்களைக் கொண்டுள்ளது.

கமெண்டில் அந்த இரண்டு மணிநேரங்களில் டிடிட் என்னதான் செய்கிறார் என்பதை பார்வையாளர்கள் யூகிக்க முயற்சிக்கிறார்கள், இன்னும் சிலர் அவர் எத்தனை முறை கண் சிமிட்டினார் என்று எண்ணியுள்ளனர். ஒரு பயனர் வீடியோவில் 362 முறை சிமிட்டியதாக கமெண்ட் செய்துள்ளார்.

ஒரு மனிதன் இரண்டு மணிநேரம் மற்றும் அதற்கு மேல் ஒன்றும் செய்யாமல் இருப்பதைப் பார்க்க மில்லியன் கணக்கான பார்வையாளர்கள் எப்படி ஆர்வம் காட்டுகிறார்கள் என்று மற்றவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர், மற்றொருவர் அவருக்கு என்ன நடந்திருப்பார் என்றெல்லாம் கமெண்ட் செய்திருந்தார். இன்னும் வேடிக்கையாக கமெண்ட் என்றால் அவர் பதிவு செய்வதற்கு முன்பு பட்டனை அழுத்த மறந்திருந்தால் என்ன ஆகியிருக்கும் என்றெல்லாம் கமெண்ட் செய்திருந்தனர்.

Views: - 0

0

0