உங்கள் பகுதியில் Zero Shadow Day எப்போது ஏற்படும் என்பதை அறிய உதவும் போன் ஆப் பற்றி தெரியுமா?
Author: Hemalatha Ramkumar18 August 2021, 11:40 am
உங்கள் பகுதியில் Zero Shadow Day எப்போது ஏற்படும் என்பதை அறிய உதவும் போன் ஆப் பற்றி தெரியுமா?
ஒவ்வொரு ஆண்டும், ஏப்ரல் மற்றும் ஆகஸ்ட் மாதத்தில் சூரியன் உச்சிக்கு நேரே வருவதால் வருடத்திற்கு இருநாள் நம் நிழலை நாமே பார்க்க முடியாத அளவுக்கு நமது காலின் அடியில் நிழல் விழும். அப்படிப்பட்ட ‘நிழலில்லா நாள்’ (Zero Shadow Day) இன்று (18 ஆகஸ்ட்) நிகழ்கிறது.
மேகமூட்டம் இல்லாமல் சூரியன் தெரிந்தால், ஓசூர், கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வாணியம்பாடி, கடலூர், ஆம்பூர், ஆரணி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, மாமல்லபுரம், கேளம்பாக்கம், வேலூர், ஆற்காடு, அரக்கோணம், ஸ்ரீபெரும்புதூர், திருவள்ளூர், ஆவடி, சென்னை ஆகிய இடங்களில் நிழலில்லா நாளை நீங்கள் அனுபவிக்க முடியும்.
சரியாக, 12 மணிக்கு சூரியன் உச்சியை எட்டும் என்பதால் இந்த நிகழ்வை அந்நேரத்தில் நீங்கள் அனுபவிக்க முடியும்.
சூரியன் தினமும் தான் தலைக்கு மேல் வருகிறதே, அப்போது தினமும் இப்படிதான் நிகழுமா என்றால் இல்லை. சூரியனின் வட திசை நகர்வு நாள்களில், ஒரு நாள், தென் திசை நகர்வு நாள்களில் ஒரு நாள் என ஆண்டுக்கு இரண்டு முறை மட்டுமே இந்த சரியான பூஜ்ய நிழலில்லா நாள் ஏற்படும். மேலும் இந்த அதிசய நிகழ்வானது உலகில் அனைத்து இடங்களிலும் ஒரே நாளில் நிகழ்வதில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
எந்தெந்த பகுதியில் எப்போது நிழலில்லா நாள் ஏற்படும் என்பதை எப்படி தெரிந்துக்கொள்வது?
உங்கள் பகுதியில் நிழலில்லா நாள் எப்போது ஏற்படும் என்பதை அறிய:-
உங்கள் போனில் Zero Shadow Day (ZSD) என்ற செயலியை தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள். நிழல் இல்லா நாள் குறித்த ஏராளமான தகவல்கள் இதில் உங்களுக்கு கிடைக்கும். அதில் உள்ள ZSD Finder அம்சத்தின் வசதியுடன் இந்திய வரைபடத்தில் உங்கள் ஊர் அமைந்துள்ள இடத்தைத் தொட்டால் அங்கு நிழல் இல்லா நாள் எந்தெந்த தேதிகளில் ஏற்படும் என்பதை அறிந்துக்கொள்ள முடியும்.
0
0