இந்திய பயனர்களைக் கவர புது வசதியை அறிமுகம் செய்தது ஜூம் | முழு விவரம் அறிக

Author: Dhivagar
10 October 2020, 12:13 pm
Zoom Announces Pricing in Rupees For Users in India
Quick Share

இந்திய பயனர்களுக்கு மிகவும் நெருக்கமானதாக மாறுவதற்காக மேலுமொரு முயற்சியாக, வீடியோ-கான்பரன்சிங் பயன்பாடான ஜூம் இப்போது டாலர், யென், பவுண்ட் ஸ்டெர்லிங் மற்றும் பல உலகளாவிய நாணயங்களுடன் அதன் திட்டத்தின் விலைகளை ரூபாயிலும் காண்பிக்க  தொடங்கியுள்ளது.

திட்டங்களின் கட்டணங்களை ரூபாயில் காண, பயனர்கள் தங்கள் ‘billing’ மற்றும் ‘sold to’ விருப்பங்களில் இந்தியா என்பதைத் தேர்வு செய்ய வேண்டும். நிறுவனம் ஏற்கனவே இந்திய கிரெடிட் கார்டுகளை ஏற்றுக்கொள்ள தொடங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

வரம்பற்ற குரூப் மீட்டிங்களுக்கு 100 பங்கேற்பாளர்களை ஹோஸ்ட் செய்ய பயனர்களை அனுமதிக்கும் ஜூம் மீட்டிங்ஸ் புரோவுக்கு மாதத்திற்கு 1,300 ரூபாய் விலைக் கொண்டுள்ளது, 300 பங்கேற்பாளர்கள் மற்றும் கிளவுட் ரெக்கார்டிங் டிரான்ஸ்கிரிப்ட்களை அனுமதிக்கும் ஜூம் பிசினஸ்க்கான விலை ரூ.1,800 ஆக உள்ளது. 500 பங்கேற்பாளர் வரம்பு மற்றும் தொகுக்கப்பட்ட கிளவுட் ஸ்டோரேஜ் கொண்ட ஜூம் எண்டர்பிரைஸ் திட்டமும் இந்தியாவில் மாதம் 1,800 ரூபாய் விலையில் கிடைக்கிறது.

இந்த ரூபாய் விலை நிர்ணயம் ஜூம் கூட்டங்கள், ஜூம் வீடியோ வெபினார் மற்றும் ஜூம் ரூம்களுக்கு மட்டுமே கிடைக்கிறது என்பதை நினைவில் கொள்க, ஆனால் ஜூம் தொலைபேசி சேவை திட்டங்கள் டாலர்களிலேயே தொடர்ந்து காண்பிக்கப்படும்.

எப்படியிருந்தாலும், நிறுவனம் இந்திய சந்தையில் அதிக கவனம் செலுத்தத் தொடங்குகிறது என்பதை சமீபத்திய நடவடிக்கை காட்டுகிறது. பரந்த இந்திய பார்வையாளர்களை ஈர்க்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக இது பெங்களூரில் ஒரு தொழில்நுட்ப மையத்தையும் மும்பை மற்றும் ஹைதராபாத்தில் இரண்டு தரவு மையங்களையும் திறந்ததும் குறிப்பிடத்தக்கது.

Views: - 57

0

0