முடிவுக்கு வந்தது 17 நாள் மரணப் போராட்டம்… கைவிரித்த மெஷின்… கடவுள் போல வந்து கைக்கொடுத்த எலி வளை ஊழியர்கள்!!

Author: Udayachandran RadhaKrishnan
28 November 2023, 9:06 pm
tunn
Quick Share

முடிவுக்கு வந்தது 17 நாள் மரணப் போராட்டம்… கைவிரித்த மெஷின்… கடவுள் போல வந்து கைக்கொடுத்த எலி வளை ஊழியர்கள்!!

சுரங்கத்தில் இத்தனை நாட்களாக உயிருக்கு போராடிக்கொண்டு இருந்த ஊழியர்கள் மீட்கப்பட்டு உள்ளனர். வெற்றிகரமாக இவர்கள் மீட்கப்பட்டு உள்ளனர். கிறிஸ்துமஸ் வரை இவர்களை மீட்க முடியாது என்று மீட்பு பணியாளர்கள் தெரிவித்து இருந்தனர். கருவிகள் எதுவும் உதவி செய்யவில்லை, ராட்சச கருவிகள் கூட சுரங்கத்தை தோண்டி உள்ள செல்ல முடியவில்லை.

ஆனால் எலி வளை ஊழியர்கள் அங்கே கைகளால் சுரங்கம் தோண்டி உள்ளே சென்று மீட்பு பணிகளை செய்துள்ளனர். குழாய்களை அமைத்து உள்ளே சென்று மீட்பு பணிகளை செய்துள்ளனர். இத்தனையையும் கைகள் மூலமே செய்துள்ளனர்.

சுத்தியல் தவிர வேறு எந்த கருவிகளையும் பயன்படுத்தாமல் சுரங்கம் அமைத்து அதன் உள்ளே குழாய் போட்டு மீட்பு பணிகளை செய்துள்ளனர்.

இந்த எலி வளை ஊழியர்கள்தான் தற்போது இவர்களை மீட்டு உள்ளனர். பொதுவாகவே எலி வளை ஊழியர்கள் தடை செய்யப்பட்டவர்கள்தான். இந்தியாவில் அதை செய்யவே கூடாது. இதை பொதுவாக நிலக்கரி எடுக்க செய்யும் முறை ஆகும்.

அதாவது சுரங்கம் உள்ளே கைகளால் தோண்டுவார்கள். தோண்ட தோண்ட துளை பெரிதானதும் அதில் குழாய் அமைப்பார்கள். குழாய் என்பது அதிகபட்சம் 4 அடி கூட இருக்காது.

குழாய் அமைத்து உள்ளே சென்றதும் அங்கே இருக்கும் நிலக்கரியை எடுப்பார்கள். அதன்பின் கிடைமட்டமாக இன்னொரு சுரங்கம் போல தோண்டி.. வெளியே வாகனங்கள் இருக்கும் பகுதியில் நிலக்கரியை கொட்டுவார்கள். அதாவது உள்ளே சென்று நிலக்கரியை எடுத்து அதை கிடைமட்டாக வேறு சுரங்கம் தோண்டி வெளியேற்றுவார்கள்.

இவர்கள் கைகளால் தோண்டி தோண்டி துளை போட்டு அதில் குழாய் போடுவார்கள். போக போக கூடுதல் குழாய்களை அமைத்து பாதை ஏற்படுத்துவார்கள்.

4 அடி கொண்ட குழாய்கள் ஆகும். இதே முறையை பயன்படுத்திதான் இங்கே பாதையை ஏற்படுத்தினார்கள். இவர்கள் குழந்தை தொழிலாளர்களை பயன்படுத்தி வந்ததால் தடை செய்யப்பட்டு விட்டனர்.

அதே சமயம் இங்கே பணிகளை செய்த எலி வளை ஊழியர்கள் முறையாக பயிற்சி பெற்றவர்கள். அடிக்கடி இந்திய ராணுவத்திற்கு உதவ கூடியவர்கள். இந்திய ராணுவத்திற்கு இவர்கள் சுரங்களை அமைக்க உதவ கூடியவர்கள். இவர்கள்தான் தற்போது முறையான அனுமதியோடு களமிறக்கப்பட்டு அங்கே பணிகளை செய்தனர்.
இவர்களின் பணிகள் தடை செய்யப்பட்டதால் ராணுவத்திற்கு மட்டும் பணிகளை செய்து வந்தனர். அதோடு கூடுதலாக பாதுகாப்பு பயிற்சிகள் கூட இவர்களுக்கு வழங்கப்பட்டது. இந்த நிலையில்தான் முறையான பயிற்சியோடு களமிறக்கப்பட்டு உள்ளே இருந்தவர்களை மீட்டு உள்ளனர்.

Views: - 314

0

0