கல்லூரி மாணவிகளை தகாத வார்த்தைகளால் திட்டி பேருந்தில் இருந்து இறக்கிவிட்ட நடத்துநர் : வைரல் வீடியோ!!

Author: Udayachandran RadhaKrishnan
23 May 2022, 4:20 pm
Condctor College Students Clash - Updatenews360
Quick Share

அரியலூரில் இருந்து தஞ்சாவூருக்கு செல்லும் அரசு பேருந்தில் பயணம் செய்ய அரசு இலவச பஸ் பாஸ் உடன் கல்லூரி மாணவிகள் ஏறினர்.

பேருந்து புறப்படும் முன்னே வந்து கல்லூரி மாணவிகள் அமர்ந்திருந்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த நடத்துனர் 5 நிமிடம் முன்னர் வந்துதான் பேருந்தில் அமர வேண்டும் என கல்லூரி மாணவிகளிடம் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

இதைக் கேட்ட மாணவிகள், அப்படி எதுவும் ரூல்ஸ் இருக்கா என கேட்க, வாக்குவாதம் முற்றியது. கல்லூரி மாணவிகளை தகாத வார்த்தைகளால் பேசி பேருந்திலிருந்து இறங்கி விடும் நடத்துனரின் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

பேருந்தில் இருந்து இறக்கிவிட்ட நடத்துனர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பள்ளி மாணவிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

Views: - 606

0

0