புழல் சிறைக் காவலர்கள் குடியிருப்பில் காவலர் தற்கொலை… அதிர்ச்சியில் உறைந்து போன சக காவலர்கள்… என்ன நடந்தது…?

Author: Babu Lakshmanan
28 May 2022, 1:01 pm
Quick Share

திருவள்ளூர் : புழல் சிறைக் காவலர்கள் குடியிருப்பில் சிறைக்காவலர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த காசிராமன் (29), கடந்த 2017இல் சிறை காவலராக சேர்ந்து புழல் விசாரணை சிறையில் காவலராக பணியாற்றி வந்தார். இவர் தமது மனைவி சரண்யாவுடன் புழல் சிறை வளாகத்தில் உள்ள சிறைக்காவலர்கள் குடியிருப்பில் வசித்து வந்தார். கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளதாக தெரிகிறது.

நேற்றிரவு மீண்டும் தகராறு ஏற்பட்டதால் காவலர் காசிராமன் படுக்கையறையின் கதவை தாழிட்டு கொண்டு நீண்ட நேரம் திறக்காமல் இருந்தார். இதனால், அதிர்ச்சி அடைந்த மனைவி கதவை தட்டியும் திறக்காததால் அருகில் இருந்தவர்களை உதவியுடன் கதவை உடைத்து பார்த்தபோது, மின் விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.

இது குறித்து தகவல் அறிந்த புழல் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை கைப்பற்றி சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். சிறைக் காவலர்கள் குடியிருப்பில் சிறைக்காவலர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சக காவலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 844

0

0